அமெரிக்காவில் புதுமையான ஃபேஸ்மேக்கரை அறுவை சிகிச்சையின்றி நோயாளியின் உடலில் பொருத்தி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் விவேக் ரெட்டி சாதனை புரிந்துள்ளார்.
சிறிய மெட்டல் சில்வர் டியூப் வடிவில் உள்ள இந்த ஃபேஸ்மேக்கர், சில சென்டிமீட்டர் நீளம் மட்டுமே கொண்டது. இது, தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஃபேஸ்மேக்கரின் அளவில் 10இல் ஒரு பகுதியைவிட சிறியது.
இதனைப் பொறுத்திக் கொண்டவர், வழக்கம்போல செயல்படமுடியும். தற்போது உள்ள ஃபேஸ்மேக்கரை விட, இது மிகவும் பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது.
பாராட்டுக்கள் .!
இவரின் சாதனை நமக்கும் பெருமைதான். இவர்கள் போன்று இந்தியாவில் பயின்று வெளிநாடுகளில் சுகமாக வாழ்பவர்கள் முடிந்தால் (அல்லது முடிந்தமட்டும்) ஒன்றிணைந்து இந்தியாவின் ஊழலை குறைக்கவும், அங்குள்ள மக்கள் கண்ட2 இடங்களில் குப்பைகள் போடாமல் நாட்டை முடிந்தவரை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், மக்கள் பண்புடன் நடந்துக்கொள்ளவும் தங்கள் வருமானத்தில் ஓரளவு ஒதுக்கி இதுபோன்ற முற்போக்கான எண்ணமுடைய இந்திய NGOsகளுடன் ஒத்துழைத்து, மற்ற வெளிநாட்டினர் இந்தியாவின்பால் நல்ல அபிப்பிராயம் ஏற்பட உதவிட வேண்டும். நாடு சுத்தம்மகவும், மக்கள் பண்புடனும் நடுந்துக்கொண்டால் எவ்வளோவோ நன்மை. எகா: சுற்றுப்பயணிகள் வருகை பன்மடங்கு பெருகும். இதனால் மக்களுக்கும் நாட்டுக்கும் வருமானம் பெருகும். எப்படியோ இருந்த சீனா, தாய்லாந்து, கொரியா etc இன்று எப்படி சுத்தம்மாக உள்ளது…!! குப்பைக்கூளங்கலுக்கு அவர்கள் சன நெருக்கத்தை ஒரு நொண்டிசாக்காக சொல்வதில்லை. (தலைப்புக்கும் எனது கருத்துக்கும் சம்பந்தம் இல்லாததுபோல் இருக்கலாம்.!! எனது ஆதங்கம்.)
உலகத்தில் எந்த மூலையில் நாம் இருந்தால் என்ன! நாம் சாதனையாளர்கள்! வாழ்த்துகள்!
இவர்களைப்போன்ற திறமைசாலிகளை ஊக்குவிக்க தெரியாத ஊழல் இந்தியா.வெட்கக்கேடு. 30 ஆண்டு பின்னோக்கினால் சீனா வறுமை நாடு — இப்போது 2வது பொருளாதார நாடு. இந்தியாவில் நடக்கும் செயல்களைப்பார்த்தால் அடிமட்டத்தில் உள்ளோர் மேல்வர எவ்வளவு காலம் பிடிக்குமோ–அல்லது அவர்கள் அப்படியே அடிமைகளாகவே
இருப்பார்களா? பதவியில் இருப்பதே அரசியல் வாதிகளின் நோக்கம் –நாட்டை முன்னுக்கு கொண்டுவர வேண்டும் என்ற எண்ணமே இல்லாத ஜடங்கள்.