கொரிய வளைகுடாவில் அமெரிக்கத – தென் கொரியத் துருப்புக்களின் இணைந்த பலம் வாய்ந்த வருடாந்த இராணுவ போர்ப்பயிற்சி இந்த மாதம் இடம்பெறவுள்ளது.
இநநடவடிக்கையானது வட கொரிய அமெரிக்க உறவில் நிலவி வரும் முறுகல் நிலையை மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வட கொரிய சிறையில் கடும் துன்பத்தை அனுபவித்து வரும் அமெரிக்கப் பிரஜையான கெனித் என்பவரை விடுவிக்கும் முகமாக வட கொரியா வரவிருந்த அமெரிக்க ராஜதந்திரியின் பயனம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சென்ற வருடம் மே மாதம் கொரியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்கப் பிரஜை கெனித்பே, வடகொரியாவிற்குத் தன் வியாபார நிமித்தம் பயணித்த போது, தாய் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் செயலில் ஈடுபடும் பயணம் அதுவெனக் குற்றஞ்சாட்டப்பட்டுப 15 வருட கடுங்கால தண்டணை விதிக்கப்பட்டது.
வட கொரியா தன் அணு ஆயுதக் கொள்கைக்கு அமெரிக்காவைப் பணிய வைக்க, கெனித்தை பயன்படுத்த முயல்வதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது. அத்தோடு அமெரிக்கத் தென்கொரியத் துருப்புக்களால் மேற்கொள்ளப்படவிருக்கும் இராணுவ நடவடிக்கையானது ஏற்கனவே திட்டமிடப்பட்ட மிகவும் வெளிப்படையான பாதுகாப்பு நடவடிக்கையெனவும் அமைச்சின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பலப்பரீட்சையின் மத்தியில் வட தென்கொரிய மக்களின் அமைதியும், உலகை அச்சத்தில் ஆழ்த்தும் வட கொரிய அணு ஆயுதக் கொள்கையும் தீர்வுகளின்றி அரசியல் மேடையில் ஆட்டம் காண்கிறது.