பெரும் கொடையாளியாக முதலிடம் பிடிக்கும் பேஸ்புக் நிறுவனர்

zuckerberg_wife_001பேஸ்புக் நிறுவனர் மார்க் மார்க் ஜுக்கர் பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிஸில்லாசான் இருவரும் அதிக நன்கொடை வழங்கிய அமெரிக்கர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.

இந்த இளம் தம்பதி 2013 ஆம் ஆண்டு 97 கோடி அமெரிக்க டொலர்கள் சமூகப் பணிகளுக்காக நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

2013 ஆம் ஆண்டு அதிக நன்கொடை வழங்கிய 50 பேர் பட்டியலை ‘தி குரோனிக்கில் ஆப் பிலெந்தரபி’ இதழ் வெளியிட்டுள்ளது.

இதில், முதலிடத்தில் சக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி உள்ளனர்.

முதல் 50 இடங்களைப் பிடித்தவர்கள் மொத்தம் 770 கோடி அமெரிக்க டொலர்களை நன்கொடையாக அளித்துள்ளனர்.

மைக்ரோசொப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா இருவரும் 18.13 கோடி அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

ஆனால், 2004 ஆம் ஆண்டு 330 கோடி அமெரிக்க டாலர்கள் வழங்குவதாக உறுதியளித்திருந்தனர். அத்தொகையில் இது கழிக்கப்பட்டுவிட்டது.

அதிக தொகை கொண்ட முதல் 30 நன்கொடைகள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

அதேசமயம், இத்தொகை பெரும்பாலும் ஆராய்ச்சி மற்றும் அறிவியல் துறைகளுக்காகவே கொடுக்கப்பட்டுள்ளது. கட்டிடங்களுக்காகக் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.