வடகொரியா- தென்கொரியா சமாதான பேச்சுவார்த்தை

Koreans_peace_talk_001கொரிய தீபகற்ப போருக்கு பின்னர் வடகொரியாவும், தென் கொரியாவும் பகை நாடுகளாகி விட்டன. இப்போது இரு தரப்பிலும் உறவை வலுப்படுத்த புதிய முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

அந்த வகையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இரு நாடுகளின் உயர்மட்டக்குழுவினர் முதல் முறையாக அமைதி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளனர்.

தென்கொரிய குழுவுக்கு ஜனாதிபதி பார்க்கின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், வடகொரிய குழுவுக்கு அந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இரண்டாவது இடத்தில் உள்ள மூத்த அதிகாரியும் தலைமை வகிக்கின்றனர்.

தென் கொரியாவில் தொடங்கியுள்ள இந்த பேச்சுவார்த்தையில் எல்லை விவகாரம், உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படுகின்றன. இந்த பேச்சு வார்த்தையின்போது தென்கொரியா, அமெரிக்காவுடன் இணைந்து நடத்தவுள்ள கூட்டு இராணுவப்பயிற்சியை நிறுத்திக்கொள்ள வேண்டும் என வடகொரியா வேண்டுகோள் விடுக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

இருப்பினும் இரு தரப்பிலும் முட்டுக்கட்டைகளை தகர்த்து எறிந்து உறவை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக தெரிய வந்துள்ளது.

போருக்குப்பின் பிரிந்து போன வடகொரியா, தென் கொரியா குடும்பத்தினர் மவுண்ட் கும்பாங்க்கில் சந்தித்துப்பேச உள்ள நிலையில் இந்த பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.