விரைவில் வேற்றுகிரக வாசிகளை சந்திப்போம்! விஞ்ஞானிகள் தகவல்

alien_001வருகிற 2040ம் ஆண்டில் வேற்றுகிரக வாசிகளை மனிதர்கள் கண்டறிவார்கள் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா, அப்படி இருந்தால் எப்படி இருப்பார்கள் என்பது போன்ற கேள்விகள் நம் மனங்களில் எழக்கூடும்.

வேற்றுக்கிரக வாசிகள் உண்மையாகவே வசிக்கின்றனர் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

தாமஸ் ஹேர் என்ற விஞ்ஞானி கூறுகையில், வேற்று கிரக வாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு கூட்டம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறும் இருக்கிறது.

ஆனால் அவர்கள் உணவு சாப்பிட்டு, தண்ணீர் குடித்து நம்மை போலவே இருப்பார்களா என்பது சந்தேகம்.

அவர்கள் வேறு மாதிரியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை, அப்படி யாராவது எங்காவது இருந்தால் நம்மை கண்டுபிடிப்பதும் சிரமம் அல்ல.

அவர்களது இடத்தில் இருந்து பயணிக்க தொடங்கியிருந்தால் 500 ஆண்டுகளிலேயே நம்மை அடைந்திருக்கலாம்.

அதுபோன்ற சம்பவம் இதுவரை நடக்கவில்லை. அதனால், அனேகமாக அதுபோல யாரும் இல்லாமல் இருக்கலாம் அல்லது நம்மை கவனிக்காமல் அவர்கள் கடந்துபோயிருக்கலாம்.

மேலும் வேற்று கிரக வாசிகள் இருந்தால் அவர்களை பார்த்து பயப்படவும் அவசியம் இல்லை.

அவர்கள் எல்லா வளங்களும் நிறைந்தவர்களாகத்தான் இருப்பார்கள். பூமியில் இருந்து தண்ணீரோ, வேறு எதுவுமோ அவர்கள் எதிர்பார்க்கப் போவதும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வேற்றுகிரக வாசிகள் பற்றி ஆராய்ச்சி நடத்தி வரும் விஞ்ஞானி சேத் ஷோஸ்டாக் என்ர என்பவர், இன்னும் 25 ஆண்டுகளில் அவர்களை நேரில் சந்திக்கலாம் என தெரிவித்துள்ளார்.