சிரியா தொடர்பான ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக ரஷியா ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளதாக ஐ.நா. தூதர் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் நிகழ்ந்து வரும் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை ஐ.நா. வழங்கி வருகிறது.
இதைத் தடுக்கும் வகையில் சிரியா அரசு செயல்பட்டால், அந்நாட்டுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கும் தீர்மானத்தை, மேற்கத்திய மற்றும் அரபு நாடுகளுக்கு ஆதரவாக ஐ.நா. கொண்டு வந்தது.
இக்கூட்டத்தை புறக்கணித்த ரஷியா, அந்தத் தீர்மானத்துக்கு எதிராக ஒரு தீர்மானத்தை புதன்கிழமை கொண்டு வந்தது.
இத்தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தூதர்களிடம், ஐ.நா.வுக்கான ரஷிய தூதர் விடாலி சர்க்கின் வழங்கினார்.