உக்ரைன் கலவரம்: 21 பேர் பலி

Ukraineஉக்ரைனில் அரசு படையினருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற கலவரத்தில் 7 போலீசார் உள்ளிட்ட 21 பேர் பலியாகி உள்ளனர்.

100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த கலவரத்தில் 1000க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் கலவரம் நடக்கும் இடத்தை விட்டு பொதுமக்கள் பாதுகாப்பான  இடத்துக்கு செல்லுமாறு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் அதிபர் விக்டர் யானுகோவிச் பதவி விலகக்கோரி, கடந்த நவம்பர் மாதம் முதல் எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது