முகநூலில் பக்காத்தான்-ஆதரவு பக்கங்களுக்குத் தடையா?

1  facebookநேற்று பிற்பகல்  தொடங்கி  மலேசியப்  பயனர்களால்  முகநூலில்  பக்காத்தான்-ஆதரவு  பக்கங்களுக்குள்  செல்ல  முடியவில்லை.

‘We Fully Support PKR<DAP>’  ‘Zhong Zheng Kuai Xun’ போன்ற  முகநூல்  பக்கங்களைப்  பார்க்க  முடியவில்லை  என  பேராக்  டிஏபி-இன் பொருளாதாரப்  பிரிவுத்  தலைவர்  சொங்  ஸெமின்  கூறினார்.

மலேசியாவில்தான்  இப்படி.  அமெரிக்காவில்  உள்ள  ஒரு  மலேசியர்,  அவற்றைப் பார்ப்பதில்  பிரச்னை  ஏதுமில்லை  என்று  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.
சிங்கப்பூரிலும்  அதைப்  பார்க்க  முடிகிறது. மலேசியாவில்  மட்டும்தான்  பார்க்க  முடிவதில்லை.

அதற்கான  காரணம்  தெரியவில்லை. அந்த  மூகநூல்  பக்கங்கள்  தணிக்கை  செய்யப்படுகின்றனவோ  என்ற  சந்தேகம்  இணையப்  பயனர்களிடையே  வலுத்து  வருகிறது.