மேலும் பல பக்காத்தான்-ஆதரவு முகநூல் பக்கங்களைப் பார்க்க முடிவதில்லை

1 blockedஇன்று  மேலும்  இரு  பக்காத்தான்  ஆதரவு  பக்கங்களைப்  பார்க்க  முடியாது  போயிற்று. இதனால், அதிகாரிகள்தான்  அவற்றைப்  பார்க்க  முடியாதபடி  தடங்கலை  ஏற்படுத்துகிறார்களோ  என்ற  சந்தேகம்  மேலும்  வலுப்பட்டுள்ளது.

இதுவரை  சீனமொழி  பக்கங்களைத்தான்  பார்க்க  முடியாமல்  இருந்தது.  இன்று  பக்காத்தானை  ஆதரிக்கும் ‘Otai Reformasi II’ என்னும்   மலாய்மொழி  பக்கத்தைப்  பார்க்க  முடியவில்லை.

அதேபோல்,  வெளிநாட்டு  வாக்காளர்களுக்காக  சீனமொழியில்  அமைந்த  ‘Hai Wai Xuan Min’ பக்கத்தையும்  பார்க்க  முடியவில்லை.

ஆக,  பார்க்க  முடியாதிருக்கும்  பக்காத்தான்  ரக்யாட்-ஆதரவு  பக்கங்களின்  எண்ணிக்கை  இப்போது  ஐந்து ஆகியுள்ளது.