உலகிலேயே ஈராக்குக்கு அடுத்தப்படியாக பாகிஸ்தான் மிக பயரங்கரவாத நாடாக அறிவிப்பு

pakistan1ஈராக்குக்கு அடுத்தப்படியாக பாகிஸ்தான் உலகிலேயே மிக பயங்கரவாத நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய உள்நாட்டு பாதுகாப்பு கொள்கை 2013-2018 ஆண்டு அறிக்கை இந்த ஆபத்தான சூழ்நிலையை விவரிக்கிறது.

மேலும் பாகிஸ்தானின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறது.பாகிஸ்தானில் கடந்த 2001ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை 13, 721 பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன இது ஈராக்கை விட சற்று குறைவானது என டான் செய்திகள் தெரிவிக்கிறது.

2001 முதல் 2005 வரை பாகிஸ்தானில் 523 பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்ந்தன.ஆனால் 2007 முதல் 2013 வரை இச்சம்பங்களின் எண்ணிக்கை 13,198 ஆக உயர்ந்துள்ளது. தற்கொலைப்படைதாக்குதல் 2001 முதல் 2007 வரை 15 சம்பவங்கள் மட்டுமே நிகழ்ந்துள்ளது.

ஆனால் 2007 நவம்பர் முதல் 2013 வரை 358 ஆக உயர்ந்துள்ளது. உலகலில் வேறு எங்கும் இது போன்று அதிகமான தற்கொலை தாக்குதல் வேறு எங்கும் நடந்ததில்லை. கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்த பயங்கரவாத சம்பவங்களின் காரணமாக பொருளாதாரம் கிட்டத்தட்ட 78 பில்லியன் டாலரை இழந்துள்ளது என்று ஆய்வறிக்கைஅ தெரிவிக்கிறது.