பூலாவ் இண்டா நிலத்துக்கு 1எம்டிபி அவ்வளவு விலை கொடுத்தது ஏன்?

1 puaஅரசாங்கத்துக்குச்  சொந்தமான  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம் (எம்டிபி), பூலாவ்  இண்டாவில்  ஒரு  நிலத்தை  அதிக  விலை  கொடுத்து  வாங்கியது  ஏன்  என்பதை  விளக்க  வேண்டும்  என  எதிரணி  எம்பி  ஒருவர் கோரிக்கை  விடுத்தார்.

1எம்டிபி  310  ஏக்கரை  வைத்துள்ள  டேட்மெக்ஸ்  சென். பெர்ஹாட்டை  ரிம317  மில்லியனுக்கு வாங்கியது  நிதி  அமைச்சை  தேவையின்றி மேலும்  கடனாளியாக்கி  விடும்  என பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி  புவா  கூறினார்.

“ஒரு  சதுர  அடிக்கு  ரிம23.50  விலை கொடுத்து வாங்கப்பட்ட  நிலத்தின்  மதிப்பு  2011 ஆகஸ்டில் ஒரு  சதுர  அடிக்கு  ரிம9.93  தான்  என்பதை  1எம்டிபி,  அறியுமா”,  என  புவா, டிஏபி  தலைமையகத்தில்  செய்தியாளர்  கூட்டமொன்றில்  கூறினார்.

இது  டேட்மெக்ஸ் நிறுவனத்தை   மீட்டெடுக்கும்  நடவடிக்கை  அல்ல வென்பதை  வரிசெலுத்தும்  மலேசியர்களுக்கு  1எம்டிபி  தெள்ளத்தெளிவாக  உணர்த்திட  வேண்டும்  என்றாரவர்.