ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் குழந்தைகள் பிறந்தவுடன் இறந்து விடுவதாக அதிர்ச்சிக்கர தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதிலும் உள்ள குழந்தைகளின் நலனுக்காக பாடுபடும் நிறுவனம் Save the Children.
இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் குழந்தைகள் பிறந்தவுடன் முதல் நாளிலேயே இறந்துவிடுவதாக தெரிவித்துள்ளது.
மேலும் உலகின் அனைத்து பெண்களும் சுகாதார சேவைகளைப் பெற முடிந்தால், உலகம் முழுவதும் ஏற்படும் இந்த மரணங்களில் எண்ணிக்கையை தடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
குறைப் பிரசவமும், பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்களும் முக்கிய அபாயங்களாகக் கருதப்படுகின்றன.
சரியான பயிற்சி பெற்றவர்களின் உதவி இல்லாமல் ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 40 மில்லியன் பெண்கள், பிரசவிக்கும் நிலைமையை மாற்ற அரசாங்கங்களை அந்த நிறுவனம் கோரியுள்ளது.
இந்த நிலைமையுள்ள மோசமான நாடுகளை சுட்டிக்காட்டிய அந்த அமைப்பு, குறிப்பாக தெற்கு சுடானில் வாழும் 10 மில்லியன் மக்களுக்கு உதவி புரிய வெறும் 300 மருத்துவத் தாதிகளே உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.