பாலியல் அடிமைகள் தொடர்பில் ஜப்பான் சர்ச்சை

skorஇரண்டாம் உலக போர் மற்றும் சீனாவுடான போரின் போது அண்டைய நாடுகளை சேர்ந்த பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருந்ததாக ஜப்பான் இராணுவம் மீது குற்றம் சுமத்தப்பட்டு வந்தது.

ஆனால் இந்த விஷயத்தில் பல ஆண்டுகாலமாக பதில் எதுவும் கூறாமல் நழுவி வந்த ஜப்பான் இறுதியாக கடந்த 1993 ஆம் ஆண்டு அண்டைய நாட்டு பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருந்ததில் தனது இராணுவத்துக்கு பங்கு இருப்பதாக ஒப்பு கொண்டு மன்னிப்பு கோரியது.

இந்த விஷயத்தில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் கொரியர்களே, கிட்டதட்ட இரண்டு லட்சம் பெண்கள் பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்தனர், இவர்களின் உறவினர்களிடம் ஜப்பான் தனது கொள்கைக்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கோரியது.

இவ்வாறு இருந்த சூழ்நிலையில், தற்போது இருக்கின்ற ஜப்பான் அரசானது எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இவ்வாறான ஒரு மன்னிப்பு கோரப்பட்டது என்பது குறித்து ஆராயக் குழு ஒன்று அமைக்க போவதாக கூறியுள்ளது.

நீண்டகாலமாகவே ஜப்பானின் தேசியவாதிகள் அப்பெண்கள் கொடுத்த வாக்குமூலத்தை நீர்த்து போக செய்ய முயற்சித்து வருகின்றனர். அந்த பெண்கள் தாமாகவே முன் வந்து பாலியல் அடிமைகளாக இருந்ததாக கூறி வருகின்றனர்.

தற்போது இருக்கும் ஜப்பான் அரசாங்கத்தின் பிடிவாதமான குணத்தை பார்த்து, துணிச்சல் உற்றுள்ள இந்த தேசியவாதிகள், ஜப்பான் போர் காலத்தின் போது நடந்து கொண்ட விதத்திற்காக விடுக்கப்பட்ட பல்வேறு மன்னிப்பு கோரும் அறிக்கைகளை திரும்ப பெற வேண்டும் என கூறி வருகின்றனர்.

ஜப்பானிடம் நேர்மை என்பதே கிடையாது என நீண்டகாலமாக கூறி வரும் தென்கொரியாவும், சீனாவும், தற்போது ஜப்பான் செய்து வரும் இவ்வகையான விஷயங்கள் ஜப்பானில் இராணுவ எண்ணங்கள் மீண்டும் தலை தூக்குகின்றன என்பதை காட்டுகிறது என கூறுகின்றன.

சீனாவில் ஜப்பானுக்கு எதிரான அலை அடித்து வரும் நிலையில், போரில் ஜப்பான் 1945 ஆம் ஆண்டு தோல்வியுற்றது, 1937 ஆம் ஆண்டு ஜப்பான் துருப்புகள் நான்-ஜிங்கில் மேற்கொண்ட படுகொலைகளை குறிக்கும் முகமாக சீனாவில் புதியதாக இரு தேசிய விடுமுறைகளை கொண்டு வரப்போவதாக சீன கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள் கூறியுள்ளனர்.

வரலாறு தொடர்பான கருத்து வேறுபாடுகள் ஏற்கனவே பிராந்திய செல்வாக்கு தொடர்பாக மோதலில் இருந்து வரும் இந்நாடுகள் இடையே மேலும் சர்ச்சையை வளர்க்கிறது. -BBC