சாபா, சரவாக் தலைவர்கள், போர்னியோ மக்கள்நலன் காக்க அப்துல் தாயிப் மஹமுட்டுக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும் என்கிறார் மாநில சீரமைப்புக் கட்சி(சாபா ஸ்டார்)த் தலைவர் ஜெப்ரி கிட்டிங்கான்.
“மலேசிய ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்தவும் பல்வேறு அரசாமைப்புத் திருத்தங்களால் பறிபோன சிறப்புரிமைகளையும் சலுகைகளையும் நிலைநிறுத்தவும் நாம் ஒரே குரலில் பேச வேண்டும்.
“நாம் அப்துல் தாயிப் மகமுட்டுக்கு (இப்போது சரவாக் ஆளுனர்) ஆதரவாக அணிதிரள வேண்டும்”, என்று ஜெப்ரி கூறினார்.