யுக்ரெய்னின் க்ரைமீயா பிராந்தியத்தில் ரஷ்யா தனது தலையீட்டை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ராஜீய ரீதியிலான சர்வதேச அழுத்தங்கள் கூடிவருகின்ற வேளையிலும், அங்கு ரஷ்யா தனது இராணுவப் பிரசன்னத்தையும் கட்டுப்பாட்டையும் வலுப்படுத்தியுள்ளது.
யுக்ரெய்னின் இராணுவ தளங்கள் தொடர்ந்தும் ரஷ்யத் துருப்பினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.
அப்பிராந்தியத்துக்கான இணைப்புச் சாலைகளில் தடுப்புகள் போடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
க்ரைமீயாவின் கட்டுப்பாடு என்பது யதார்த்தத்தில் ரஷ்ய துருப்பினர் வசமே உள்ளதாக அங்குள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
க்ரைமீயாவின் கெர்ச் நகருக்கு எதிர்ப்புறமாக உள்ள தமது கரையில் ரஷ்யா இராணுவ துருப்பினரை குவிக்க ஆரம்பித்துவிட்டதாக யுக்ரெய்னிய எல்லைக்காவல் படையினர் கூறுகின்றனர்.
இப்பிராந்தியத்தில் சில இடங்களில் கைத்தொலைபேசி சேவை சிக்னல்கள் முடக்கப்பட்டுள்ளன. -BBC