சௌதி: வெளிநாட்டு தொழிலாளர் தடுப்பு மையத்தில் கலவரம்

arabsaudiசௌதி அரேபியாலிருந்து வெளியேற்றப்படக் காத்திருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான தடுப்பு மையம் ஒன்றில் நடந்த கலவரத்தில் ஒருவர் இறந்துவிட்டார் என்று சௌதி போலிசார் தெரிவித்தனர்.

இக்கலவரத்தில் ஒன்பது பேர் காயமடைந்திருக்கின்றனர்.

மெக்காவுக்கு அருகே இருக்கும் அல்-ஷுமைசி என்ற இடத்தில் இருக்கும் இந்த மையத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது, அதைக் கட்டுப்படுத்த தாங்கள் தலையிட வேண்டியிருந்தது என்று போலிசார் கூறினர்.

சௌதி அரேபியாவில் ஆவணங்கள் இல்லாத நிலையில் இருக்கும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் இருப்பை சட்டபூர்வமாக்கிக்கொள்ளக் கொடுத்திருந்த காலக்கெடு நவம்பர் மாதம், முடிந்தபோது, அவர்களை சௌதி அரேபிய அரசு நாட்டிலிருந்து வெளியேற்றியிருந்தது.

இந்த மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் சிலர் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் குறித்து மனித உரிமைகள் அமைப்பான ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் கடந்த மாதம் விமர்சனங்களைத் தெரிவித்திருந்தது.