– மு. குலசேகரன், மார்ச் 6, 2014.
வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் இந்திய கட்சிகளை தேசிய முன்னணியில் சேர்க்கலாம் என்று பாரிசான் மேலிடம் தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளி வந்துள்ளது.
இது எந்த வகையில் தேசிய முன்னணியை பலப்படுத்தப் போகிறது என்பது ஒரு பெரிய கேள்வியாகும். மேலும், அந்த நோக்கத்தை உள்நோக்கிப்பார்த்தால், அது இந்தியர்களைப் பிளவுப்படுத்தி அவர்களின் ஒற்றுமையைக் குலைத்து அதன் வழி அவர்களின் தார்மீக, சட்டப்பூர்வமான உரிமைகளைக் கேட்கும் வலுவை அழிப்பதற்கு போட்ட சதியின் ஒரு பகுதியாக இருப்பது தெரியவரும்.
நல்லா தலைமையேற்றிருக்கும் கட்சியான மலேசிய இந்தியர் ஐக்கியக் கட்சி, தனேந்திரனின் மக்கள் சக்தி கட்சி, மூன்றாகப் பிளந்து கிடக்கும் ஐபிஎப் கட்சி மற்றும் கிம்மா கட்சி ஆகிய அனைத்தும் அவற்றுக்கு தலைமை ஏற்றிருக்கும் தலைவர்களுக்காக, அவர்களுக்கு வளம் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே அமைக்கப்பட்ட கட்சிகள்.
ஐபிஎப் கட்சி மட்டும் பண்டிதன் தலைமை ஏற்றிருந்த வரையில் ஒர் இலட்சியப் பாதையில் போய்க் கொண்டிருந்தது. அவரின் மறைவிற்குப் பிறகு அந்த இலட்சியம் காணாமல் போய், இப்பொழுது கட்சி யாருக்குச் சொந்தம் என்று மூன்று குழுக்கள் ஒன்றுக்கொண்டு போட்டி போட்டுக்கொண்டிருக்கும் அளவிற்கு “வளர்ச்சி” அடைந்துள்ளது.
இந்த 4 கட்சிகளும் ஒட்டு மொத்த மலேசிய இந்தியர்களும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு எந்த ஒரு சேவையையும் வழங்கியிருப்பதாகத் தெரியவில்லை.
நல்லா செய்வது இதுதான்: எப்பொழுதெல்லாம் விமான நிலையங்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் பிரதமருடன் நேரடியாகப் பேசி தீர்வுகாணும் “வல்லமை” உடையவர். மற்ற நேரங்களில் அன்வாரை எப்படியெல்லாம் சிக்கலில் மாட்டிவிடலாம் என்கின்ற சீரிய சிந்தனையுடன் வலம் வருகிறவர். ஓர் உற்ற நண்பனை எப்படியெல்லாம் காட்டிக் கொடுத்து அதன்வழி வரும் தீய சுகங்களை அனுபவிக்கலாம் என்பதற்கு நல்ல உதாரணம் நல்லகருப்பன்!
தனேந்திரனோ விழலுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கு மட்டுமே கசிந்ததுபோல, ஹிண்ராப்ட் என்ற பெரும் வயலில் அறுவடைக்குப்பின் தங்கிவிட்ட புல் போல அவ்வப்போது அரசாங்கம் அவருக்கு மானியம் என்ற பெயரில் போடும் பிச்சையை மக்களுக்கு கிள்ளிக் கொடுத்து விட்டு தானும் இருக்கிறேன் என்று காட்டிக் கொண்டிருப்பவர்.
அண்ணன் எப்போது சாவான் திண்ணை எப்பொழுது காலியாகும் என்பதற்கேற்ப இந்த பாரிசான் ஆதரவு கட்சிகள் என்று கூறிக் கொள்ளும் அனைத்தும் வேதமூர்த்தி விட்ட இடத்தை எப்பாடுபட்டாகிலும் தனதாக்கிக் கொள்ளவேண்டும் என்று சுயநல நோக்குடன் எத்தனித்துக் கொண்டிருக்கின்றன என்பதனை மக்கள் புரிந்து கொண்டுதான் உள்ளனர்.
இப்பொழுதெல்லாம் மக்கள் மிகவும் தெளிவாகவே இருக்கிறார்கள். நிறைய தகவல் சாதனங்கள் – இணையதளம், டிவிட்டர், முகநூல், வாட்ஸ் அப் – போன்றவற்றால் செய்திகளை மக்கள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் நிலையில் இருப்பதால், யார் யார் என்னென்ன மக்களுக்குச் செய்கிறார்கள் என்பதனை அனைவரும் சரியாகவே கணித்து வைத்திருக்கின்றார்கள்.
ம.இ.காவும் சரி மற்ற இந்திய கட்சிகளும் சரி சாதாரண மக்களை விட்டு விலகி வெகுதூரம் சென்று விட்டன. சென்ற தேர்தலில் இந்தியர்கள் வெறும் 42 விழுக்காட்டினர் மட்டுமே பாரிசானுக்கு வாக்களித்தனர் என்பதனை பிரதமரே வெளிப்படையாகக் கூறியிருக்கின்றார்.
இந்த நிலை பாரிசானுக்கு சாதகமாக அடுத்த தேர்தலில் மாறும் என்பதற்கான அறிகுறிகள் எதுவுமில்லை. அப்படி இருக்கையில் இந்த கொசுருக் கட்சிகள் ஆளும் கட்சியில் இணைவதற்கான முயற்சிகள் யாவும் மக்களுக்கு எந்த விதத்திலும் நன்மை பயத்திடப் போவதில்லை. அப்படியே இணைந்தாளும்கூட இதன் பயனை அடையபோவது நல்லாவோ தனேந்திரானாகவோத்தான் இருக்க முடியுமே தவிற சாதரண மக்கள் அல்ல. நஜிப்பிற்கு ஜால்ரா போட்டு வந்ததனால் கிடைத்த பிச்சை என்றே இதனைக் கூறலாம்.
ஓர் இனம் ஒரு மொழியைப் பேசும் கட்சியைச் சார்ந்தவர்கள் தங்கள் உள்விவகாரங்களில் சகோதர உணர்வோடு உடன் பாடு காண இயலாமையால் வேற்று மொழி பேசி வேறு இனத்தைச் சார்ந்தவரின் (அவர் பிரதமராகவே இருக்கட்டுமே) உதவியியை நாடுவது ஒரு மானக்கேடான செயல். அதற்கும் மேலாக அதே பிரதமரிடம் சென்று என்னை உங்கள் கட்சியுடன் இணைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்பது அதைவிட வெட்கக்கேடானது. தோழனோடு ஏழமை பேசேல் என்பது முது மொழி. உன்னுடைய பலவீனங்களை மாற்றானுடன் வெளிப்படையாக விவாதித்து உதவி கேட்பது அந்த மூன்றாம் மனிதனின் மனதில் உன்னைப்பற்றிய அபிப்பிராயாம் எவ்விதமாக பதிவுசெய்யப்படும் என்பதனை மொத்த ஐபிஎப் உறுப்பினர்களும் உணர்ந்து பார்க்கவேண்டும். இந்தியர்களின் ஒரு பிரிவினரை மட்டுமே குறியாக வைத்து அமைக்கப்பட்ட ஐபிஎப் கட்சியானது அந்த சிறிய எண்ணிக்கையிலான உறுப்பினர்களிடையேகூட ஒற்றுமையை ஏற்படுத்த முடியாத போது எப்படி பாரிசானுடன் இணைந்து ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் சேவை செய்யப் போகிறது?
பாரிசானில் ம.இ.காவைத் தவிர வேறு எந்த கட்சியும் இந்தியர்களைப் பிரதிநிதித்து அங்கம் வகிக்கக் கூடாது என்று சாமிவேலு பிடிவாதமாக இருந்தார். இப்பொழுது அந்தப் பிடிவாதம் பழனிவேலு வந்தவுடன் தளர்ந்து விட்டதோ? அல்லது பாரிசானை தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு இணங்க வைக்கும் ஆற்றலை பழனிவேல் இழந்து விட்டாரோ? ம.இ.காவின் தற்போதைய நிலை என்ன என்பது விளக்கப்பட வேண்டும்.
இந்திய மக்கள் யார் பாரிசானுடன் இணைகிறார்கள் என்பதைப் பெரிதுபடுத்துவதில்லை. மக்களுக்கு அக்கட்சிகள் என்ன செய்தன என்றுதான் தரம் பார்க்கிறார்கள். இந்த நான்கு கட்சிகளும் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்துக்கும் இந்தியக் கலாச்சாரத்துக்கும் ஆபத்து என்று வந்த பொழுது அதனைத் தற்காத்து எதிர்ப்பு தெரிவித்ததாக தெரியவில்லை. பெர்காசா போன்ற இனவாத அமைப்புக்கள் மொழிக்கும் இனத்துக்கும் ஊறு விளைவிக்க முற்பட்டபோது நல்லகருப்பன், தனேந்திரன், ஐபிஎப்காரர்கள் எங்கு போய் ஒளிந்து கொண்டனர்? நல்ல வேளையாக இந்தியர்களின் மேல் அக்கறை கொண்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் நிறைய பேர் இருப்பதனால் அவ்வப்போது தங்கள் ஆட்சேபங்களை பதிவு செய்து இந்தியர்களின் தன்மானத்தை நிலை நிறுத்தி வந்துள்ளனர்.
மக்களின் செல்வாக்கு தங்களுக்கு இருப்பதாக இந்த 4 கட்சிகளும் அடிக்கடி கூறிக்கொள்கின்றன. உண்மையான செல்வாக்கு பதவி நியமனத்தில் வருவதல்ல. அந்தப் பதவி மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட ஒருவருக்கு வழங்கப்படுமேயானால் அதுவே மக்களின் செல்வாக்கை பிரதிபலிக்கும் ஒரு பதவியாக அமையும். இந்த நான்கு கட்சிகளும் அந்தத் தகுதியைக் கொண்ட தலைவர்களைக் கொண்டுள்ளனவா என்பதனை அதன் உறுப்பினர்களின் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன்.
எத்தனைக் கட்சிகளை பாரிசான் தன்னுடன் இணைத்துக் கொண்டாலும் பாரிசான் மீது மக்களின் (குறிப்பாக இந்தியர்களின்) வெறுப்பு அதிகரிக்குமே தவிர குறையப் போவதில்லை. அதுவும் வேதமூர்த்தி பதவி விலகியதிலிருந்து மக்கள் பாரிசானை இன்னும் அதிகமாக வெறுக்கத் தொடங்கி விட்டனர்.
பெரும் ஆரவாரத்துடன் தேர்தலின் கடைசி நாட்களில் மக்களறிய செய்து கொண்ட ஒப்பந்தத்தையே வெளிப்படையாக மீறியது இந்த பாரிசான் அரசாங்கம். இனி எத்தனைக் கட்சிகளை தன்னுடன் இணைத்துக்கொண்டாலும் பாரிசானின் எதிர்காலம் கேள்விக்குறியே? அதற்கு முன்னோடியாக விளங்கப்போவது காஜாங் இடைதேர்தல் என்பது வெள்ளிடைமலை.
சரியா போட்டீங்க வை பி. நீண்ட நாள் எதிர்ப்பார்த்த ஆப்பு !
இது மட்டுமல்ல மலேசிய இந்தியர்கள 10 பிரிவா பிரிச்சி வைத்துள்ள இன்றைய BN தலைவர் நஜிப் அவர்கள் இந்தியர்களின் ஓட்டுக்கு குறி வைத்தார் ஆனால் அந்த பருப்பும் வேக வில்லை.
இன்று ம இ கா பழனி தலைமைத்துவம் பதவிக்கு மட்டுமாய் ஒரு பாவப்பட்ட கட்சியாய் BN எனும் ஆமைமேல் (காசு முட்டைகள் போடுவதால்) நத்தையை போல் நகர்கிறது.
நல்லவனுக்கு எதிரியான கேடு கெட்ட கருப்பான் என்ற சந்தர்ப்ப கருவண்டு காஜாங் சட்ட மன்றத்துக்கு போட்டி இடுவதாக கொக்கரித்தது எப்படியாவது இன்னும் ஒரு தவனை செனட்டர் பதவிக்கு அடிபோட்டுசி …..இப்போ கிழட்டு பொட்டை ககோழி போல முக்கி மோதி பாக்குது கந்தசாமி சேவல் அடிச்சாதானே எதாச்சும் விழும்.? ஒரு ஒட்டுக்கு கூட வக்கிலாத ………இந்த சமுதாயம் சந்தி சிரிக்க வெச்சிடும் என்பது நல்லாவே தெரியும்.இவன் துப்பாக்கி குண்டு வெச்ச ஜெயில் விளையாட்டே ஒரு விசித்திர கேஸ்.
நீங்கள் குறிப்பிட்ட மட்டற்ற மற்ற சமூக மடையர்கள் பாவம் அதுகள் அப்படிதான் பால் குடிகள் அல்ல பால் உண்ணிகள்.
சரியாக இன்றைய மலேசியா இந்தியரின் அரசியல் நிலையை படம் பிடித்து காட்டுவதாக உள்ளது கட்டுரை. “ஒன்னா இருக்க கத்துக்கணும்…இந்த உண்மையை சொன்னா ஒதுக்கணும். நல்ல பாடல் . இதற்கு மேலும் இனி எப்படித்தான் சொல்லுவது? பாப்போம் என்னதான் மக்கள் செய்ய போகிறார்கள் என்று? எவன் “மேலே” இருந்து குதித்து இந்த ஜன்மங்களை காப்பாற்ற போகிறானோ? பார்ப்போமே! ஒற்றுமை//// ஒற்றுமை//// ஒற்றுமை///// இது கிலோ என்ன விலை என்று கேட்கும்… நம் சமுதாயம் கந்து…. கண்ணில் கண்ணீர் சிந்துகிறது! நெஞ்சில் இரத்தம் வழிகிறது!!
குலா சாா் வணக்கம்,இப்போ பி.என்,ம.இ.க இவா்களிடம் தான் சண்டை ஆனா தேவையை பாக்காத்தானிடம் யாறும் கேட்பதில்லையே,மாறாக ம.இ.க விடமல்லவா அழுது புழம்புராங்க.அப்போ எதுக்கு பாக்காதான்.குலா சாா்,இப்போதாவது பாக்காத்தான் ஹின்ராப் கோரிக்கையை ஏத்துக்குமா?????.போனஸ் குடுக்க மாட்டான் ஆனா நிரைய டோனேஷன் கொடுப்பான் அப்பத்தானே டத்தோ கிடைக்கும்.பின் நிரைய கான்ரைக்ட் கிடைக்கும் கம்பனிய பெருசாக்கலாம்,நிரையபேறுக்கு வேளை கொடுக்கலாம்.என்னை பொருத்தவரை ஐ.பி.எப் தான் அடுத்த பி.என்னில் இந்திய கட்சி.பிரதமா் நினைத்தால் கட்சியை ஒன்றுபடுத்தலாம்.இவா்களும் வாழத்தானே வந்தவா்கள்?????.பன்டிதன் பி.என்னுக்கு செய்த சேவை நன்றி கடனுக்கு கொடுக்கலாமே.நாராயண சமா்பணம்.
ஹிட்ரப் வேதா, அரசு பதவியில் இருந்து எதையும் மக்களுக்கு செய் முடியாத அளவு முட்டுக்கட்டையாய் இருந்தது யார் ?இனி அணைத்து இந்திய கட்சிகளும் பி என்னில் இணைந்து இந்தியர்களுக்கு தன் கடமையை செய்ய தலைமை தாங்கபோவது யாரோ?
இல்லை ஒதுக்கீடு கிடைத்து தன் ஆதரவாளர்களை வாழவைக்கும் பழைய முறையை மட்டும் செயல் வீரர்கள் பயன் படுத்திக்கொல்வர்களோ? ஆண்டவனுக்கே வெளிச்சம்.
எது எப்படி இருந்தாலும் பி .என். எதிர்கால வெற்றிக்கு அடித்தளம் உறுதியாகிவிடும்.
நம் தார்மிக உரிமைகளை கெஞ்சி -கூத்தாடி உடன்படிக்கை .புரிந்துணர்வு ஒப்பந்தம், கை எழுத்து என்ற அடிப்படையிலேயே மட்டும் பி.என். பரிசீலனை தொடரப்படும்.
யார் ஆட்சிக்கு வந்தால் நமகென்ன? நாம சினிமா பார்ப்போம், கூத்தடிப்போம், நிகழ்ச்சிகளுக்கு ஆடம்பர செலவு செய்வோம், தண்ணி அடிப்போம், பிள்ளைகள் எந்த கேங்லெ இருந்தா என்னா. எதிர்காலத்தப்பத்தி எனக்கு ஏன் அக்கறை. இதுதான் 50% இந்தியர்களின் போக்கு, 30% இந்தியர்கள் வெள்ளைகாரன் போல. அவனாச்சி அவன் நண்பனாச்சி, நல்ல சம்பளம் இருக்கு, வாரம் ஒரு வாட்டி பாப் போனா போதும், நம்ம குடும்பம் கஷ்டப்படலையே, மத்த தமிழன் பத்தி எனக்கென்னா. இப்படி அவன். 20% இந்தியர்கள் தனக்கும் மொழிக்கும் எதிர்காலத்தில் நமது சமுதாய நிலையையும் சிந்தித்து சிந்தித்து ரணமாகிறோம். என்ன செய்யலாம். 20% நினைத்தால் தகவல் பரப்புவோராகவும் எழுச்சி ஊட்டுபவராகவும் விளங்கலாம். அரசியலை அதுவும் பின்- னை நம்பி வாழும் தலைவர்கள் நமக்கு ஒன்னும் செய்ய மாட்டார்கள்.
Vanakkam YB.Kula.
Thank you for your comments. However, the opposition ruled states are equally depriving the Indian community. For example, New land allocated for SJKT Valdor, Nibong Tebal, Pulau Pinang by Penang State government. The state government only allocated about 1.7acres of land to build new school. The federal government had allocated full budget for construction for full facility school same as Sekolah Kebangsaan. However, we have difficulty to build the school due to small space for 500++ pupils. We need minimum 3 acres of land to build full facility school and there are ample of land besides the current land. Besides that, the location of the land allocated is NOT suitable or conducive for learning. There is big monsoon drain behind the land which is clogged with pig waste. To date no action had been taken by the State government to solve this matter. with the current land area, there will be no field for pupils, the proposed new school building will be 5 storey building to cater for the full facilities which is very stressful for the pupils and teachers to climb 5 storey to teach especially lady teachers (currently 80% teachers are ladies). We hope YB Kula with DCM can visit to the new school site to get full information. We need constructive action to solve the Indian issues. Let the Penang state government show a good example in solving problem. We need leaders to provide solutions regardless of party. Thank you.
நீங்கள் சொல்லுவதில் ஒரே ஒரு உண்மை இருக்கிறது. இவர்களை வைத்து இந்தியர்களின் ஓட்டுக்களைப் பிரிக்க வேண்டும் என்பதே நஜிப்பின் திட்டம். அவர் வெற்றிப் பெற்றிருக்கிறார் என்பது உண்மை. இனி அரசாங்கம் வெளியிடும் அனைத்துப் பாரங்களிலும் மலையாளி, தெலுங்கர், தமிழர் என்று பிரித்துப் பார்க்கப்படும். இப்படிப் பிரித்துப் பார்ப்பதற்கு நீங்கள் கூறிய தலைவர்கள் நிறையவே பாடுபட்டிருக்கின்றனர்.
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் இந்த குருட்டு
ம இகா எருமைகளுக்கு புறியவில்லை.[umno கூத்தாடிகள் ]
நல்ல தெளிவான விளக்கத்தை முன் வைத்துள்ளீர்கள் .
நம்ம இனத்துக்கு போராட வர்றே தலைவனுக்கு அம்னோ அரசாங்கம் ஆரம்பத்திலே விளையாட ஒரு “latuk” பட்டமும் கொஞ்சம் சில்ட்ரையும் கொடுத்து தலைகணம் உயர வச்சி அவன் வந்த நோக்கத்தையே மறக்க வசிருவாணுங்க! அந்த அளவுக்கு நம்மவனுங்க அறிவாளிங்க!அதுக்கு அப்புறம் அந்த புது தலைவர் பல மேடை நாடகங்களில் தேசிய பின்னணியை வாய் கிழிய தூக்கி பேசுவாரு! கடைசியிலே அவரை நம்பி வந்தவங்களுக்கு அரிசி ,பருப்பு,ஆளுக்கு ஒரு குச்சி முட்டாயும் கொடுத்து சந்தோஷ படுத்துவாறு! நமக்கு அது போதுமே,வேற என்ன வேணும்!
நமக்கு ஒரு ஆளும்கச்சியும் ஒரு எதிர் கட்சியும் போதும். சமுதாய நம்மையே கருதி மற்ற கச்சிகள் நடு நிலை வகித்தல் இந்திய சமுதாயத்திற்கு செய்யும் பெரிய உதவியகஹிருக்கும்.