பிரிட்டனில் சமய வழக்கங்களுக்காக மிருகங்களை வெட்டும்போது மனிதத் தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்று நாட்டின் மூத்த மிருக மருத்துவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
முஸ்லிம்கள் அல்லது யூதர்களின் இறைச்சி சந்தைகளுக்காக மிருகங்களை வெட்டும்போது, முதலில் உணர்விழக்கச் செய்துவிட்டு- மிருகங்கள் வலியை உணராதபடி அவற்றைக் கொல்ல வேண்டும் என்று பிரிட்டனின் மிருக மருத்துவச் சங்கத்தின் தலைவர் ஜோன் பிளக்வெல் கூறியுள்ளார்.
அது சாத்தியப்படாவிட்டால், அவ்வாறான நடைமுறை கடைப்பிடிக்கப்படவில்லை என்று அந்த இறைச்சியில் லேபல் குத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அல்லாவிட்டால், இந்த வழிமுறைகளை கடைப்பிடிக்காமல் இறைச்சி வெட்டுவதற்குத் தடைவிதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆனால், கோஷர் அல்லது ஹலால் முறையில் இறைச்சி வெட்டும்போது மிருகங்கள் உடனடியாக இறந்துவிடும் என்றும் மற்ற வழிமுறைகளை விட வலி குறைவாகவே இருக்கும் என்றும் யூத சமூகத்தின் தலைவர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார். -BBC
உயிர் எப்படி போனால் என்ன ? பாவிகளா !