அபாய நிலையில் பாரம்பரிய சின்னங்கள்

world_heritage_001உலகின் பாரம்பரிய சின்னங்கள் அனைத்தும் வெப்பமயமாதல் பிரச்னையால் பாதிக்கப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

யுனெஸ்கோவின் பாரம்பரியத் தலங்கள் பட்டியலில் தற்போது 720 இடங்கள் குறிக்கப்பட்டுள்ளன.

அதிகரித்து வரும் வெப்பநிலையினால் உயரும் கடல் மட்டமானது, இந்தப் பாரம்பரியத் தலங்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தற்போது காணப்படும் உலக வெப்பமயமாதல் போக்கு அடுத்த இரு நூற்றாண்டுகளுக்கு தொடருமானால் பாரம்பரிய தலங்கள் சுதந்திரதேவி சிலை, இண்டிபெண்டன்ஸ் ஹால், லண்டன் டவர், சிட்னி ஓபரா ஹவுஸ் பாதிக்கப்படும் அபாய நிலை உள்ளதென தெரிவித்துள்ளனர்.

இவை மட்டுமின்றி புருக், நேப்பிள்ஸ், ரிகா, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர மையங்கள், வெனிஸ் மற்றும் அதன் காயல் பகுதிகள், ரோபன் தீவு, வெஸ்ட்மினிஸ்டர் அபே போன்ற முக்கிய தலங்களும் பாதிப்படையும் என்றும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

உலக வெப்பமயமாதலின் காரணமாக கடல் மட்டங்கள் மெதுவாக ஆனால் அதே சமயம் சீராக உயர்ந்து வருகின்றன என்றும், இந்த நிலை சுற்றுச்சூழல் வெப்ப உயர்வு நின்றபிறகும் தொடர்ந்து காணப்படும் எனவும் ஆஸ்திரியாவின் இன்ஸ்ப்ரக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னணி எழுத்தாளரான பேராசிரியர் பென் மர்சியான் குறிப்பிடுகின்றார்.

இதுகுறித்து போஸ்ட்டாம் காலநிலைத் தாக்கம் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வு பேராசிரியரும், இணை ஆசிரியருமான ஆண்டர்ஸ் லெவர்மான் கூறுகையில், 2000 ஆண்டுகளில் சமுத்திரங்கள் புதிய சமநிலையை அடைவதை நாம் கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகா பகுதிகள் இழக்கும் பனி இழப்பீடைக் கொண்டு கணக்கிடமுடியும்.

அதேசமயம் நாம் பாதுகாக்கும் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பாதுகாக்க இந்த கால அளவுகள் போதுமானவையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.