ரஷ்ய அதிபர் புதினின் உடல் அசைவுகளை நோட்டமிடும் அமெரிக்கா

viladimin_putir_001உடல் அசைவுகளை மொழிப்பெயர்க்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக செயல்பட்டு வருகின்றது.

கடந்த 2009ம் ஆண்டிலிருந்து அமெரிக்க அரசானது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் , ரஷ்ய பிரதமர் ட்மிர்ட்டி மெட்வெடேவ், வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், ஈராக்கின் முன்னாள் அதிபர் மறைந்த சதாம் உசேன், தீவிரவாதி ஒசாமா பின்லேடன் ஆகியோரின் காணொளி பதிவுகளையும் உன்னிப்பாக ஆராய்ந்து அவர்களின் மனநிலையை மொழிபெயர்ப்பதற்கென்று ஒரு குழுவினை அமெரிக்க அரசு நியமித்துள்ளது.

உடல் அசைவுகளை (பாடி லேங்குவேஜ்) நெருக்கமாக ஆராய்ந்து, அதன் மூலம் இவர்களின் மனநிலையை அறிந்து, அதற்கு தக்கபடி செயல்பட அமெரிக்க ராணுவ தலமையகமான பெண்டகன் ஏராளமான பணத்தை செலவிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது வரை இந்த ஆராய்ச்சிக்காக 3 லட்சம் டொலர்களுக்கு மேல் செலவிட்டுள்ள அமெரிக்க அரசு தற்போது இந்த பணியை ராணுவ தலமையகமான பெண்டகனிடம் ஒப்படைத்துள்ளது.

இந்த ஆராய்ச்சியின்படி, உக்ரைனின் கிரிமியா பகுதியை ஆக்கிரமிக்க நினைத்த ரஷ்ய ராணுவத்தின் திட்டத்தை, புதினின் காணாளி பதிவாகி இருந்த அவரது உடல் அசைவுகளின் மூலம் முன்கூட்டியே கணிக்க முடிந்ததாக பெண்டகன் வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

கடந்த 2012ம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்ட புதினின் உளவியல் தொடர்பான தகவல்களின் அடிப்படையில் அவரது அன்றாட காணொளி பதிவுகளின் காட்சிகளை பார்த்து, புதினின் மன ஓட்டம் என்ன? என்று மொழிப்பெயர்ப்பதற்காக ஒரு குழுவினர் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.