உக்ரைனை ஆக்கிரமித்த ரஷ்யா: 6 நாட்டு தலைவர்களுடன் ஒபாமா ஆலோசனை

obamaஉக்ரைன் விவகாரம் தொடர்பாக 6 நாட்டு தலைவர்களுடன் ஒபாமா ஆலோசனை நடத்தி வருகிறார்.

உக்ரைன் நாட்டிலுள்ள கிரீமியா சுயாட்சி பகுதியில் ரஷ்யா ராணுவம் நுழைந்து பெரும் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

அதோடு அந்த பிரதேசத்தை ரஷ்யாவுடன் இணைக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது.

ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை தடுப்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த சில தினங்களாக பல்வேறு நாட்டு தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதற்கிடையில் ஒபாமா உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், இத்தாலி பிரதமர் ரென்சி மற்றும் எஸ்டோனியா, லாத்வியா, லிதுவேனியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இந்த தகவலை வெள்ளை மாளிகை அதிகாரிகள் வெளியிட்டனர். ஆனால் அதில் விவாதிக்கப்பட்ட விவரங்களை தெரிவிக்க மறுத்து விட்டனர்.