வியட்னாமிய மீட்புக் குழு, கடலில் ஒரு விமானத்தின் கதவும் வால்பகுதியும் மிதக்கக் கண்டதாகவும் அவை மலேசிய விமான நிறுவன (எம்ஏஎஸ்)த்தின் போயிங் 777-200க்குச் சொந்தமானவையாக இருக்கலாம் என்று நம்புவதாகவும் அறிவித்துள்ளது.
இத்தகவல் வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளியாகியுள்ளது.
ஆனால், எம்ஏஎஸ் தனக்கு அது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறியது.
வியட்னாமிய தகவல், தொடர்பு அமைச்சின் வலைத்தளத்தின் பதிவிடப்பட்டிருந்த ஒரு தகவலை அடிப்படையாக வைத்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அச்செய்தியை வெளியிட்டிருந்தது. மலேசியாகினி காலை 9மணிக்கு அத்தளத்தைத் தேடிப்பார்த்ததில் அப்படிப்பட்ட செய்தியைக் காண முடியவில்லை.
இருட்டிக் கொண்டிருந்ததால் அவை மிதந்துகொண்டிருந்த பகுதியில் கடல் விமானம் ஒன்றை இறக்கிச் சோதனை செய்ய முடியாமல் போய்விட்டது என்றும் அது கூறிற்று.
ஏன் கவலை படுகிறீர்கள் ,நம்ம நாட்டில் எத்தனையோ bomoh
குருஜிக்கள், இருக்கும் போது ,அவர்கள் தங்களின் அபூர்வ
சக்தியை கொண்டு எதிர் காலத்தில் நடக்கபோவதை கூறும்
சக்தியை கொன்றவர்கள் ,அவர்கள் ஏன் முன் வந்து காணமல் போன விமானத்தை கண்டு பிடித்து கொடுக்க வேண்டியது தானே .அட போட நைனா ,நாங்கள் வயிற்று பொழப்புக்காக சக்தி கிக்தி ன்னு சொல்லி மக்களை ஏமாற்றி கிட்டு இருக்கிறோம் ,உன்னிடம் மட்டும் சொல்கிறேன் நைனா ,நாங்களும் உன்னை போல சாதாரண மனிதன் தான் ,என்ன செய்வது எம்மாளிகள் நமது சமுதாயத்தில் அதிக மாக இருப்பதால் சாமி பேரை சொல்லி சம்பதிதுகொண்டு இருக்கிறோம் அதிலும் மண்ணை போடதே நைனா,