அமெரிக்க ராணுவத்தில் மத அடையாளங்களான தாடி, தலைப்பாகைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று அந்நாட்டு பாதுகாப்புத்துறையிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோ கிரவ்லி, ரோட்னி ஃபெரேலிங்கியைசென் ஆகியோர் தலைமையிலான 105 எம்.பி.க்கள் இது தொடர்பாக பாதுகாப்புத்துறை செயலாளர் சக் ஹேகலுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், சீக்கியர்களின் மத நம்பிக்கைகளான தலைப்பாகை மற்றும் தாடி வைத்துக்கொள்வதை அமெரிக்க ராணுவம் அனுமதிக்க வேண்டும். அவர்களது முந்தைய சாதனைகளை அடிப்படையாகக் கொண்டு, அமெரிக்க ராணுவத்தில் தங்கள் மத அடையாளங்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். சீக்கியர்கள் அமெரிக்க ராணுவத்தில் முதல் உலகப் போரிலிருந்து பணியாற்றி வருகின்றனர். அவர்கள் இங்கிலாந்து, கனடா மற்றும் இந்திய ராணுவத்தில் தங்களது மத அடையாளங்களுடன் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் 3 சீக்கியர்களும், ராணுவ விதிமுறைகளுக்குள்பட்டு தங்கள் மத அடையாளங்களை சிறப்பான முறையில் கடைப்பிடித்து வருகின்றனர். அவர்களால் ஹெல்மெட், விஷவாயு மூடி ஆகியவற்றை அணிய முடியும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலேசியாவிலும் சீக்கியர்கள் அரசாங்க உத்தியோகத்தில் மத அடையாளத்துடன் வேலை செய்கிறார்கள், அதற்க்கு மலேசியா அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
மலேசியா அரசாங்கம் முதலில் அனுமதி அளிக்கவில்லை– சீக்கியர்கள் இந்நாட்டுக்கு காவல் துறையினராக கொண்டு வரப்பட்டனர், அப்போது இது பிரிட்டிஷ் காலனி. அமெரிக்கர்களுக்கு சீகியர்களைப்பற்றி அவ்வளவு தெரியாது — இப்போதுதான் சீக்கியர்கள் அதிகமாக அமெரிக்காவிளிருக்கின்றனர்