சீனாவின் முடிவால் இந்தியா அதிர்ச்சி!

ஐ.நா பாதுகாப்புசபையில் நிரந்தர நாடுகளின் வரிசையில் இந்தியா இடம் பெற சீனா உதவி செய்யும் என்று நம்பிக்‌கையுடன் இருந்த நேரத்தில் சீனா ‌திடீரென பாகிஸ்தானிற்கு ஆதரவு அளித்துள்ளது. இதனால் இந்தியா அதிர்ச்சியடைந்துள்ளது.

ஐ.நா., பாதுகாப்பு சபையில் வீட்டோ என்றழைக்கப்படும் நிரந்தர உறுப்பு நாடுகளாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா உட்பட ஐந்து நாடுகள் இடம்பெற்றுள்ளன. உறுப்பினர்களி்ன் எண்ணிக்‌கையை அதிகரிக்க வேண்டுமென வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகள் ‌வேண்டுகோள் விடுத்து வரும் நேரத்தில் இந்தியா உறுப்பு நாடுகளின் வரிசையில் இடம் பெறுவதற்கு சீனா உட்பட பல்வேறு நாடுகளின் ஆதரவை இந்தியா கோரி வருகிறது. இந்த ‌கோரிக்கைக்கு சீனாவும் ஆதரவு தெரிவித்தது. இந்நிலையில் ஆதரவு நிலையி்ல் இருந்து தன் முடிவை சீனா மாற்றிக்‌கொண்டுள்ளது.

தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவு தர போவதாக தெரிவித்துள்ளது. இது குறித்து சீனாவின் வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் ஜியாங்யூ கூறியதாவது: “சீனாவும் பாகிஸ்தானும் அனைத்து விசயங்களிலும் ஒத்த கருத்து கொண்டவையாக திகழ்கி்ன்றன. இந்தியா நிரந்தர உறுப்பு நாடு ஆவதற்கு சீனா எவ்வித உறுதியையும் அளிக்கவில்லை” என தெரிவித்தார்.

TAGS: