பொருளாதாரத் தடைகளை மீறுவதில் கைதேர்ந்தது வடகொரியா!

missile-north-koreaதன் நாட்டின் மீதான சர்வதேச பொருளாதாரத் தடைகளை மீறுவதில் வடகொரியா கைதேர்ந்தது என்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டில் 8 பேர் கொண்ட வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டு ஐ.நா.வில் சமர்ப்பித்த அறிக்கையில், “”வடகொரிய கப்பல் ஒன்று சமீபத்தில் பனாமா நாட்டு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டது.

அப்போது, கியூபாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 10,000 டன் சர்க்கரைக்குக் கீழ் ஆயுதங்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. அந்தக் கப்பலை சோதனையிட்ட பின்னரே, பொருளாதாரத் தடையை எந்த அளவிற்கு வடகொரியா மீறுகிறது, சம்பந்தப்பட்ட நாடுகளை ஏய்க்கிறது என்பது தெரிய வந்தது. ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கு வடகொரியா சவாலாக உள்ளது.

சட்டவிரோதமாக ஆயுதங்களைக் கடத்தி வருவதுடன், அணு ஆயுத மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைத் தயாரிப்பதிலும் அந்நாடு ஈடுபட்டு வருகிறது.

சோவியத் ரஷியாவால் உருவாக்கப்பட்ட ஆயுதங்களை பழுதுபார்ப்பதற்காக வடகொரியாவுக்கு அனுப்பியதை கியூபா ஒப்புக் கொண்டுள்ளது. மேலும், ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வடகொரியா வருமானம் ஈட்டி வருகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.