‘முதலை அடி கொடுப்பேன், ஜாக்கிரதை’-கைரிக்கு போமோ எச்சரிக்கை

ibraகாணாமல்போன  எம்ஏஎஸ்  விமானத்தைக்  கண்டுபிடிக்க போமோ  இப்ராகிம்  மாட்  ஸின்,  கேஎல்  அனைத்துலக  விமான  நிலையத்தில்  தேங்காய்களையும்  மூங்கில்  கழிகளையும்  வைத்துக்கொண்டு  சடங்குகள்  செய்வது  பலருடைய  கவனத்தையும்  கவர்ந்துள்ளது.

ஒரு   பகுதியினர்  அவரது  செயல்முறைகளை  வியந்து  பார்க்கிறார்கள். இன்னொரு  பகுதியினர்  அவர்  செய்வதெல்லாம்  கோமாளித்தனம்  என்று  ஆத்திரமடைகிறார்கள்.  அப்படி  ஆத்திரமடைந்தவர்களில் ஒருவர் இளைஞர், விளையாட்டு  அமைச்சர்  கைரி  ஜமாலுடின். அவர்,  சமய  அதிகாரிகள்  இப்ராகிமைக் கைது  செய்ய  வேண்டும்  என்று  கூறி  இருக்கிறார்.

இதை  அறிந்த இப்ராகிம்  சும்மா  இருப்பாரா? கடுமையான  எச்சரிக்கை  விடுத்திருக்கிறார்  கைரிக்கு.

தம்மைப்  பற்றிச்  சொன்னதையெல்லாம்  கைரி  மீட்டுக்கொள்ள  வேண்டும்,  இல்லையேல்   சட்ட  நடவடிக்கையை  எதிர்நோக்க  வேண்டியிருக்கும் என்றாரவர்.

“கைரி  ஜமாலுடினுக்குத்  தெளிவாக  சொல்லிக்கொள்கிறேன். அவருக்குச் சவால்  விடுக்கிறேன். (அமைச்சர்) வேலையை விட்டு  வாருங்கள். நானும்  மகாகுரு  பொறுப்பைத்  துறக்கிறேன். மோதிப் பார்ப்போம். முதலை  மாதிரி  அடித்துத்  தூக்கிப்  போடுவேன். அப்போது  தெரியும்  அவருக்கு”, என்றார்.