மலாய் இனவாத அமைப்பான பெர்காசாவும் இதர அழுத்தமளிக்கும் இஸ்லாமிய குழுக்களும் அவர்களின் சொந்த தேசிய ஒற்றுமை கூட்டணி (National Unity Front) ஒன்றை அமைத்துள்ள நடவடிக்கை அகோங்கிற்கே சவால் விடுவதாகும் என்று டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் சாடியுள்ளார்.
பேரரசரால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தேசிய ஒற்றுமை ஆலோசனை மன்றத்திற்கு (NUCC) எதிராக டிஎபியும் அதே போன்ற ஒன்றை செய்திருந்தால், டிஎபி ஆட்சியாளர்களை அவமானப்படித்தி விட்டது என்று குற்றம் சாட்டியிருப்பார்கள் என்று லிம் கூறினார்.
“பெர்காசா செய்திருப்பதை டிஎபி அல்லது ஏதாவதொரு பக்கத்தான் உறுப்பு கட்சிகள் செய்திருந்தால், அதவது தேசிய ஒற்றுமை ஆலோசணை மன்றத்தின் மீதான பேரரசரின் உரைக்கு எதிராகச் செயல்பட்டிருந்தால், அவர்கள் நம்மை தேசத்திற்கும் அகோங்கிற்கும் எதிரானவர்கள் மற்றும் துரோகிகள் என்று குற்றம் சாட்டி டிஎபி மற்றும் இதர பக்கத்தான் ரக்யாட் தலைவர்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்பார்கள்”, என்று கிட்சியாங் வருத்தமுடன் கூறினார்.
ஏன் இனவாதம் மற்றும் சமய விரோதங்களை தூண்டிவிடுவதற்கு பெர்காசா மற்றும் இதர அரசு சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கிட் சியாங் நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கேட்டுள்ளார்.
கடந்த திங்கள்கிழமை நாடாளுமன்ற நடப்புக் கூட்டத்தை திறந்து வைத்து உரையாற்றிய பேரரசர் அரசாங்கத்தின் தேசிய ஒற்றுமை ஆலோசனை மன்றத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதை கிட் சியாங் சுட்டிக் காட்டினார்.
ஆனால், பெர்காசா அரசாங்கம் அமைத்துள்ள தேசிய ஒற்றுமை ஆலோசனை மன்றத்தை தொடார்ந்து குறைகூறி வந்ததோடு அது இப்போது நாட்டின் இன உறவு பிரச்சனைகளைக் கையாள்வதற்கு தனது சொந்த தேசிய ஒற்றுமை கூட்டணியை அமைத்துள்ளது.
“தீவிரவாத பெர்காசாவும் இதர அரசு சார்பற்ற அமைப்புகளும் அவர்களுடைய சினமூட்டும், உணர்ச்சியற்ற அறிக்கைகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் பேரரசருக்கு பகிரங்க சவாலையும் எதிர்ப்பையும் அளித்துள்ளனர்”, என்று கிட் சியாங் அவரது நேற்றைய அறிக்கையில் கூறியுள்ளார்.
“அவர்கள் ஒட்டுமொத்தமாக தேசிய ஒற்றுமை ஆலோசனை மன்றத்தை நிராகரித்துள்ளதோடு அதற்கு மாற்றாக தேசிய ஒற்றுமை கூட்டணையை நிருவியுள்ளனர்”, என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
முன்னாள் தலைமை நீதிபதி தலைவராக நியமனம்
நேற்று, பெர்காசா ஆதரவிலான தேசிய ஒற்றுமை கூட்டணி முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகமட்டை அதன் முதல் தலைவராக அறிவித்தது.
22 அண்டுகள் மலேசிய முன்னால் பிரதமர் மகா தீரர் காட்டிய வழியை பெர்காசவும் கடைப்பிடித்து வருகிறது. மாமா குட்டி பிரதமர் ஆவதற்கு முன்பு நாம் ஒற்றுமையாகத்தான் இருந்தோம். இவன் செய்த அட்டூழியங்கள் கொஞ்சமல்ல. கல்வி,பொருளாதாரம்,வேலை வாய்ப்பு அனைத்தும் இனரீதியாக கொண்டு, அவர் நினைத்ததை சாதித்து விட்டார். அவன் காட்டிய வழிதான் லிம் அவர்களே. மகாதீரர் பிரதமராக இருந்த காலத்தில் நீங்களும் ஒரு ” தலை” தானே.
“யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே” என்ற பழமொழியை அரச பரம்பரையினர் அறிந்திருக்க நியாயமில்லைதான். அவர்களுக்கு தமிழ் தெரியாதே.எதிர்காலத்தில் இடுப்பு வலி படப் போவது யார் என்று அறியாமல், வருவதை வலி கொண்டு வரவேற்கின்றனர் போலும்!. LKS சும்மா அலட்டிக்காதீங்க. அவரவர் எதிர்காலத்தைப் பற்றி அவரவருக்கே அக்கறை இல்லை என்றால், நாம் ஏன் சும்மா அலட்டிக்கணும்?. புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரி.
ஆப்பு வைப்பவன் ஆப்பாலே சாவான்….
லிம் கிட சியாங் ஒரு இல்லசியவாதி அவர் தமிழனின் குல தெய்வம் அவருக்கு நம் ஒரு கோயில் கட்டனும் கிட சியாங் தமிழனின் தகப்பன் நல்ல வழிகாட்டி நீடுடி வாழ்க
கோயில் கட்டுற கலாச்சாரம் இன்னும் முடியல போலிருக்கே..
அரசியல்வாதிகளை நன்கு அறியாமல் அதிகம் புகழாதீர்கள் sham. எல்லோரிடையும் குறையும், நிறையும் இருக்கவே செய்யும்.
Kit Siang இன் நாட்டு தலைவன் தலைவா வாழ்க!!!