மலேசியா இண்டர்போல் உதவியைத் திரும்பத் திரும்ப நிராகரித்ததாம்

abcஎம்எச்370  காணமல்போனது  பற்றிய  விசாரணையில்  இண்டர்போல்  பலமுறை  உதவ  முன்வந்தபோதும்  மலேசிய  போலீஸ்  அதைப்  புறம்தள்ளிவிட்டதாகக்  கூறப்படுகிறது.

மேலைநாட்டு  சட்ட  அமலாக்க  அதிகாரி  ஒருவர்  இதைத்  தெரிவித்ததாக  அமெரிக்காவின்  ஏபிசி  செய்தி  நிறுவனம்  கூறிற்று.

“பழைய  9/11  அணுகுமுறைதான்:  தகவல்களைப்  பகிர்ந்துகொள்வதில்லை  என்ற  பிடிவாதம்தான்  காரணம்”,  என்று   அந்த  அதிகாரி  கூறினார்.

இதனால்,  விசாரணை  நேரம்  இழக்கப்பட்டிருக்கிறது  என்று  கூறிய  ஏபிசி,  எஃப்பிஐ- யைக்கூட  மலேசியா  உதவிக்கு  அழைக்கவில்லை  என்பதையும்  சுட்டிக்காட்டியது.