பிரிட்டனின் நாளிதழான டெய்லி மெயில், குதப்புணர்ச்சி வழக்கில் அன்வார் இப்ராகிம் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதால் ஆத்திரமடைந்த எம்எச்370 விமானி ஸஹாரி அஹமட் ஷா அந்த விமானத்தைக் கடத்திச் சென்றார் என்று கூறியிருப்பதை பிகேஆர் மறுத்துள்ளது.
ஸஹாரி கடந்த ஆண்டு ஜனவரி 23-இல் பிகேஆரில் சேர்ந்தார் என்பது உண்மைதான் ஆனால் அதை வைத்து எம்எச்370 காணாமல் போனதற்கும் கட்சிக்கும் தொடர்புண்டு என்று கூறுவது நியாயமல்ல என்று சுபாங் எம்பி ஆர்.சிவராசா கூறினார்.
“ஊடகங்கள் வெறும் ஊகங்களில் ஈடுபடக்கூடாது. டெய்லி மெயிலும் ஒரு செய்தித்தாள்தான். நம்பத்தக்க வட்டாரம் எதையும் மேற்கோள் காட்டாமல் அது அவ்வாறு கூறியுள்ளது”, என்று சிவராசா காஜாங்கில் கூறினார்.
டெய்லி மெயில், ஸஹாரியை ஒரு “அரசியல் வெறியர்” என்றும் அன்வாரின் “தீவிர ஆதரவாளர்” என்றும் வருணித்துள்ளது.
சார் UK MAIL படிக்கவும், அது மட்டும் உண்மை என்றால், செத்தான்
எம் எச் 370 விமானம் காணாமல் போனதுக்கும் எதிர்கட்சிக்கும் தொடர்பு உள்ளது என்றால், சைபுல் மர்மக் குகையில் அலசி ஆராய்ந்து பார்க்கவும்.. ஒருகால் அங்கு மறைக்கப்பட்டிருக்குமோ?? அறிவிலிகள் போல் விமர்சனம் செய்யாமல், உண்மை நிலவரத்தினை அறிய முற்படுங்கள்…அனைத்து 239 பயணிகளின் நிலையையும் அவர்கள் உறவினர்களின் வேதனைகளையும் சற்று சிந்தித்து தெளிவுடன் பேசுங்கள்…அனைத்து பயணிகளும் நலமுடன் நாடு திரும்ப இறைவனை பிரார்த்திப்போமாக..!!!!!!
மங்கோலிய அழகி கொலை வழக்கில் நியாயமான தீர்ப்பு கிடைக்காததால் அவரது ஆதரவாளர்கள் ஏன் MH 370 விமானத்தை கடத்தி இருக்ககூடாது.
எனக்கும் இதில் சற்று சந்தேகம் இருக்கிறது ,ஒருவேளை உண்மையாக இருக்குமோ .யுகங்கள் அடிபடையில் ஏன் இருக்க கூடாது ?அன்வாருக்கு தீர்ப்பு வழங்க இருந்த சிலமணி நேரத்துக்கு முன்னாடி இந்த விமானம் காணமல் போய் உள்ளது இந்த யுகத்துக்கு மேலும் வலு சேர்த்து உள்ளது .ஒருகாலத்தில் அன்வாருக்கு நமது நாட்டில் இருக்கும் ஒரு தூதரகம் அடைக்கலம் கொடுத்தது அனைவருக்கும் ஞாபகம் இருக்கும் .இப்படி அன்வாரின் சதி வளைக்கும் எதோ ஒரு நாடு உறுதுணையாக இருக்குமோ ? அந்த நாட்டில் இந்த விமானம் பதுக்கி வைத்து இருக்க படுமோ என்பது சந்தேகத்திற்கு இடமளிகிறது,ஒரு வேலை காஜாங் சட்ட மன்ற தேர்தலுக்கும் இந்த விமான கடத்தலுக்கும் சம்மதம் இருக்குமோ?காரணம் ஆளும்கட்சியின் பிரசாரத்தை முறியடிக்க இந்த விமான கடத்தல் நாடகத்தை எதிர்க்கட்சி அரேகேற்றி இருந்தாலும் இருக்கலாம் ,நஜிப்பை தேர்தல் பிரசாரம் பண்ண விடமால் தடுக்க இது ஒரு வழியாக இருந்து இருக்கலாம் .ஒரு நாட்டின் பிரதமருக்கு இடைதேர்தல் முக்கியமா இல்லை 239 உயிர்கள் முக்கியம் என்றால் முதலில் 239 உயிர்கள்தான் முக்கியம் .இந்த பர பரப்பான நேரத்தில் பிரதமரை நேரடியாக தேர்தல் நடவடிக்கைகளில் பங்கேற்பதை தடுக்க இந்த சதி நடந்து இருக்கலாம் .பழிக்கு பழியாக கூட இது இருக்கலாம் .அன்வாரை எப்படி தேர்தலில் போட்டி இட முடியாமல் தடுக்க பட்டதோ அதே மாதரி பிரதமரை பழி தீர்க்க நடந்த சதியாக கூட இருக்கலாம் .இது ஒரு உகமே தவிர உண்மையாக இருக்கும் என்பதற்கில்லை .என்னதான் நடந்தது என்று பொருத்து இருந்து பார்போம் .
bN காரனுக்கு ஒன்னுக்கு மற்றும் வெளியாகா விட்டாலும் அன்வர்டன் காரணம் நஜிப்புக்கு …..என்றலும் அன்வர்தான் போங்கடா………..