பாக்.: குரான் எரிப்பு குற்றச்சாட்டின் பேரில் இந்து சமுதாய கூடத்துக்கு தீவைப்பு

pakistanபாகிஸ்தானின் சிந்து மாகாணத்துடைய தென்பகுதியில் இந்துக்களின் சமுதாய கூடம் ஒன்றுக்கு கும்பலொன்று தீவைத்துள்ளது என பொலிசார் கூறுகின்றனர்.

இந்து ஒருவர் புனித குரானை அவமதித்துவிட்டதாக குற்றச்சாட்டுகள் பரவிய நிலையில் அக்கும்பல் இக்காரியத்தை செய்ததாக கூறப்படுகிறது.

இந்து ஒருவருடைய வீட்டின் முன்னால் இருந்த குப்பைக் கூடையில் குரானின் பக்கங்கள் எரிந்து கிடந்ததை கண்டதாக சிலர் கூறியதை அடுத்து, லார்கானா என்ற ஊரில் சமுதாய கூடத்துக்கு சனிக்கிழமை இரவு தீவைக்கப்பட்டிருந்தது.

அக்கம்பக்கத்து ஊர்களில் உள்ள இந்துக் கோயில்களுக்கும் இந்துக்களின் சொத்துக்களுக்கும் போராட்டக் கும்பல் தீவைக்க முயன்றபோது பொலிசார் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும், வானில் சுட்டும் கூட்டத்தைக் கலைத்துள்ளனர்.

குரானை இழிவுபடுத்துகிற, இஸ்லாத்தை நிந்தனை செய்கிற காரியங்கள் நடந்துவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழ அதனால் வன்செயல்கள் தூண்டப்படுவதென்பது பாகிஸ்தானில் அடிக்கடி நிகழ்ந்துவருவதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர். -BBC