நைஜீரியாவில் மூன்று கிராமங்களுக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த 100 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் யாகூபு பிடியாங் கூறியதாவது:
அங்கன்வான் காடா, சென்சிய், அங்கன்வான் சாங்வாய் ஆகிய கிராமங்களில் சனிக்கிழமை இரவு மக்கள் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது தீவிரவாதிகள் 40 பேர் துப்பாக்கிகள் மற்றும் கத்திகளுடன் திடீர் தாக்குதல் நடத்தினர்.
அதில் 100 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். சென்சிய் கிராமத்தில் மட்டும் 50 பேர் பலியாகியுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவர்கள் என்று கூறப்படுகிறது. பலூலானி என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலை நடத்தியதாக, பாதிக்கப்பட்ட கிராமத்தினர் குற்றம்சாட்டினர்.