மரணத்தை தழுவும் இளம் மொட்டுகள்! சீனாவின் அதிரடி முடிவு

china_baby_hatch_001சீனாவில் பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தொட்டில் குழந்தை திட்டத்தை கைவிட அரசு முடிவு செய்துள்ளது.

சீனாவில் தீர்க்க முடியாத நோயின் தாக்கத்துடன் பிறக்கும் குழந்தைகளை சாலையோரங்களிலும், குப்பைத் தொட்டிகளிலும் பல பெற்றோர் வீசி விடுவதால் குழந்தைகள் மரணத்தை சந்திக்கின்றன.

இந்த அவல நிலையை விலக்கவே கடந்த ஜனவரி மாதம் சீன அரசு முதல் கட்டமாக 10 மாகாணங்களில் 25 காப்பகங்களை தொடங்கியது.

இங்கு தாங்கள் பாரமாக நினைக்கும் குழந்தைகளை தூக்கி வரும் பெற்றோர் காப்பகத்தின் அழைப்பு மணியை அழுத்தி விட்டு சென்று விடலாம் என்றும், பின்னர் அங்கு உள்ள பராமரிப்பாளர் குழந்தைகளை எடுத்து சென்று கவனிக்க தொடங்கி விடுவர் எனவும் அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு மாத காலத்தில் மட்டும் இங்கு பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 1121ஆக உயர்ந்துள்ளது மற்றும் இவற்றில் 67 சதவீதம் குழந்தைகள் ஒரு வயதுக்குட்பட்டவையாகும்.

மேலும் சராசரியாக நாளென்றிற்கு 20 குழந்தைகள் புதிதாக வருவதால் குழந்தைகளை வைத்து பராமரிக்க முடியாது என காப்பக அதிகாரிகள் இங்கு கொண்டு வரப்பட்ட 262 குழந்தைகளை நேற்று முன்தினம் முதல் திருப்பி அனுப்பி விட்டதாக சீன ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.