க்ரைமியாவை ரஷ்யா தன்னுடன் இணைக்க நடவடிக்கை எடுத்த மறுதினம், செவஸ்டோபோலில் உள்ள க்ரைமிய துறைமுகத்தின் யுக்ரெய்னிய கடற்படைத்தளத்தினுள் பல நூற்றுக்கணக்கான ஆயுதந்தாங்கிய ரஷ்ய ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிரடியாக நுழைந்துள்ளனர்.
யுக்ரெய்னிய கடற்படையினர் அந்தக் கடற்படைத்தளத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்பதற்காக அவர்கள் அங்கு சென்றதாக நம்பப்படுகின்றது.
ரஷ்ய கொடிகள் அங்குள்ள கட்டிடங்களில் பறக்கின்றன.
க்ரைமியாவில் ஒரு ஆயுத மோதல் ஏற்படுவதைத் தடுப்பதற்காக அங்கு இரு அரசாங்க அமைச்சர்கள் செல்வதாக யுக்ரெய்ன் கூறுகின்றது.
ஆனால், அவர்களை அங்கு அனுமதிக்க மாட்டோம் என்று ரஷ்ய ஆதரவிலான அரசாங்க அதிகாரிகள் கூறியுள்ளனர். -BBC