ஜோகனஸ்பர்க், தென் ஆப்பிரிக்காவில் கடந்த 20 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் இருந்து இந்திய மொழிகள் நீக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், அங்கு வாழும் சுமார் 1.4 மில்லியன் இந்திய வம்சாவளியினர் விடுத்த கோரிக்கையை அடுத்து ஆப்பிரிக்க அரசு இந்தி, தமிழ், குஜராத்தி, தெலுங்கு மற்றும் உருது ஆகிய 5 இந்திய மொழிகளை தனது பாடத்திட்டத்தில் மீண்டும் இணைத்துள்ளது.
முதற்கட்டமாக, இந்திய வம்சாவளியினர் அதிகம் வசிக்கும் குவாசுலு நடால் மாகாண பள்ளிகளில் இந்த பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மூன்றாவது மொழிப்பாடமாக தேர்வு செய்யும் வகையில் இந்த மொழிகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதற்கான சுற்றறிக்கையை அந்த மாகாண கல்வித்துறை தலைவர் நிகோசினதி சிஷி பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளார். இந்த மொழிப்பாட திட்டம் அரசுப் பள்ளிகளில், பள்ளி இறுதி ஆண்டு வரை செயல்படுத்தப்படும்.
தென் ஆப்ரிக்கா தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது வரவேற்புக்கு உரியது. ஆனால், எங்கள் மலேசியா எல்லா உலக நாடுகளுக்கும் ஒரு முன்னோடி!
தாய் மொழி கல்விக்கு உலகத்திற்கு மலேசியா ஒரு முன் உதாரணம், மலேசியாவை போல், புலம் பெயர்ந்து தமிழர் வாழ்கிற நாடுகளில் இதை அமல்படுத்தினால் நன்றாக இருக்கும், கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழ்கிற தமிழ் மக்கள் தாய் மொழியை மறந்து கொண்டு இருக்கிறார்கள்.