உக்ரெய்ன் விவகாரம்: ஜான் கெர்ரியுடன் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தை

Kerry-Lavrov meetஉக்ரெய்ன் விவகாரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜார்கெர்ரி, மற்றும் ரஷ்ய வெளியுறுவத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ஆகியோர் நேற்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

4 மணி நேரம் நடந்த் இந்த பேச்சு வார்த்தையில் இரு தரப்பு பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உகெர்யின் பதற்றத்தை தணிக்க ரஷ்யா உக்ரெயின் எல்லையில் இருந்து ரஷ்ய படைகளை திரும்ப பெற வேண்டும் என ஜான்கெர்ரி தெரிவித்தார்.

மேலும் உக்ரெய்னில் உண்மையான முன்னேற்றம் ஏற்பட வேண்டும் எனில் ரஷ்யா தனது படைகளை அங்கிருந்து வாபஸ் பெற வேண்டும்.

இந்த படைகள் உக்ரெயினில் பயத்தையும் அச்சுறுத்தலையும்  உருவாக்கும் என நாங்கள் நம்புகிறோம். அதை திரும்ப பெறாத வரை மாற்று சூழலை அங்கு உருவாக்க முடியாது.

கிரிமியா மீதான ரஷ்ய நடவடிக்கைகள் சட்டவிரோதமானது நெறியற்றது என்பதில் அமெரிக்கா தெளிவாக உள்ளது என கெர்ரி கூறினார்.