கிரிமீயாவை தொடர்ந்து பின்லாந்து, பெலாரஸ் பகுதிகளை கைப்பற்றி ரஷ்யாவை விரிவுபடுத்த புதின் திட்டமிட்டுள்ளார்.
ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைனில் சமீபத்தில் உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டதால் அந்நாட்டு ஜனாதிபதி விக்டர் யனு கோவிச் தலைமறைவனார்.
இதனை பயன்படுத்திக் கொண்ட ரஷ்யா தனது எல்லையில் உள்ள அந்நாட்டின் கிரீமியாவுக்கு ராணுவத்தை அனுப்பி அதை தன் வசமாக்கி கொண்டது.
இந்நிலையில் கிரிமீயா மாகாணத்தை பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் ரஷ்ய ஜனாதிபதி புதின் கடந்த 17ம் திகதி கைப்பற்றினார்.
இதற்கு சர்வதேச நாடுகளிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியபோதும் அதை புதின் பெரிதாய் கண்டு கொள்ளவில்லை.
இதனைதொடர்ந்து தற்போது அவர் பின்லாந்து, பெலாரஸ் பகுதிகளை கைப்பற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக, அவரது முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் இல்லா ரியோனோவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இவர் அளித்த பேட்டியில், கிரீமியாவுடன் புதினின் ஆக்கிரமிப்பு முடியபோவதில்லை.
அவருக்கு தனது நாட்டின் எல்லையில் உள்ள பெலாரஸ், பின்லாந்து, பாலடிக் மாகாணங்கள் போன்றவற்றின் மீது ஒரு கண் உள்ளதால் கூடிய விரைவில் அங்கும் ரஷிய ராணுவத்தை அனுப்பி ஆக்கிரமிப்பு செய்யவுள்ளார்.
ஏனெனில், ரஷ்யாவின் கடைசி பேரரசர் நிகோலஸ்–2 மற்றும் சோவியத் ரஷியாவின் சர்வாதிகாரி ஸ்டாலின் ஆகியோர் காலத்தில் இருந்தது போன்று மிகப்பெரிய நாடாக ரஷியாவை மாற்ற வேண்டும் என்பது புதினின் ஆசை என அவரது ஆலோசகர் தெரிவித்துள்ளார்.