தோல்வியில் முடிந்த ரஷ்யா-அமெரிக்கா பேச்சுவார்த்தை

Kerry-Lavrov meetஉக்ரைன் பிரச்சனைக்கு தீர்வு காண அமெரிக்க – ரஷ்யா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

உக்ரைன் பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

உக்ரைனில் பதற்றத்தை தணிக்கும் வகையில் அதன் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள ரஷ்யப் படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று லாவ்ரோவிடம் ஜான் கெர்ரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியார்களிடம் கூறுகையில், ரஷ்யப் படை உக்ரைனில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையை தவிர்க்க சர்வதேச சமுதாயத்துடன் இணைந்து உக்ரைன் ராஜீயரீதியான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது அவசியம் என்பதை தெரிவித்துள்ளோம் என கூறியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது ரஷ்யப் படைகளை விலக்கிக்கொள்வதற்கான பல்வேறு யோசனைகளை ஜான் கெர்ரி முன்வைத்தபோதும், அவற்றில் எத்தகைய அணுகுமுறையை ரஷ்யா மேற்கொள்ளும் என்பது குறித்து எத்தகைய உறுதிமொழியையும் லாவ்ரோவ் அளிக்கவில்லை.

இதனால் இவர்களது 4 மணி நேரப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததுடன் , உக்ரைன் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் முட்டுக்கட்டை நீடிக்கிறது.