பணிப் பெண்ணைக் காப்பாற்ற குருதிப் பணம் கொடுக்கும் இந்தோனேசியா

saudi_executionசவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இந்தோனேசிய பணிப்பெண் ஒருவரைக் காப்பாற்றுவதற்காக சுமார் இரண்டு மில்லியன் டாலர் பணத்தை குருதிப் பணமாக (இழப்பீடாக) வழங்குவதற்கு இந்தோனேசியா இணங்கியுள்ளது.

ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் தனது எஜமானியை கொன்றதாக-குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஸட்டினாவுக்கு அடுத்த சில நாட்களில் கழுத்து வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்தது.

கொல்லப்பட்டவரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுப் பணமாக இந்தோனேசியாவில் உள்ள சமூக ஆர்வலர்கள் கொஞ்சம் பணம் சேர்த்துள்ளனர்.

இப்போது மிகுதிப் பணத்தை செலுத்துவதற்கு இந்தோனேசிய அரசாங்கம் முன்வந்துள்ளது.

தனது தலைமயிரைப் பிடித்து இழுத்து சுவரில் மோதச் செய்து தாக்கிய படியாலேயே, தான் தனது எஜமானியைத் தாக்கியதாக ஸட்டினா கூறுகிறார்.

இழப்பீட்டுப் பணம் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது வழக்கு மீது மறுவிசாரணை நடத்தப்படவுள்ளது. -BBC