கொலம்பியாவில் பெண்கள் மீது தொடரும் அசிட் தாக்குதல்கள்

colombiaகொலம்பியாவில் பெண்களின் மீது நடத்தப்படும் அசிட் வீச்சுத் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றமை தொடர்பில் அதிர்ச்சியடைந்துள்ளதாக அதிபர் ஹுவான் மனுவெல் சந்தோஸ் கூறியுள்ளார்.

இந்தத் தாக்குதல்களை நடத்துவோர் தொடர்பான தகவல்களை அளிப்போருக்கு சுமார் 40 ஆயிரம் டாலர்கள் வரை சன்மானம் வழங்கப்படும் என்றும் அதிபர் கூறியுள்ளார்.

தலைநகர் பொகோட்டாவில், 33 வயதுப் பெண்ணொருவர் மீது அவரது வீட்டுக்கு வெளியே அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் அசிட் தாக்குதல் நடத்திய சம்பவம் கடந்த வாரம்நடந்துள்ள நிலையில் அதிபரின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.

இந்தத் தாக்குதலில் அந்தப் பெண்ணின் முகம் மோசமாக காயமடைந்தது.

இவ்வாறான அசிட் தாக்குதல்களுக்கு வாழ்க்கைத் துணைகளின் பொறாமை, தனிப்பட்ட பழிவாங்கல்கள் மற்றும் அண்டை வீட்டாருடன் ஏற்படுகின்ற தகராறுகள் காரணமாகின்றன. -BBC