ஆப்கானிஸ்தானில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் நாளை ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, பல்வேறு அயல்நாடுகளிலிருந்து செய்திகளை சேகரிக்க பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிரூபர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் அந்நாட்டின் கிழக்கு மாகாணமான கோஸ்ட்-டில், பொலிஸ் தலைமையகத்தில் 2 பெண் பத்திரிகையாளர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அங்கு வந்த தலிபான் தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இதில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார், மேலும் படுகாயமடைந்த மற்றொரு பத்திரிகையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விருவரும் எந்த நாட்டவர் என்பதை குறிப்பிடாத பொலிசார், அவர்கள் மேற்கத்திய நாட்டினர் என்று மட்டுமே தெரிவித்துள்ளனர்.