வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறது. எவுகணைகளை வீசி ஒத்திகையும் நடத்துகிறது. சர்வதேச நாடுகளின் கண்டனத்தை கண்டு கொள்வதில்லை.
இந்த நிலையில் கடந்த மாதம் இறுதியில் வடகொரியாவுக்கு போட்டியாக தென்கொரியாவும் கடலுக்குள் ஏவுகணைகளை வீசி சோதித்து பார்த்தது. இதனால் ஜப்பான் கடல் பகுதியில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது.
இந்த சூழ்நிலையில் அமெரிக்க ராணுவ செயலாளர் சக்ஹெகல் ஆசிய பசிபிக் நாடுகளில் 10 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றார்.
அங்கு ஜப்பான் ராணுவ அமைச்சர் சுனோரி ஒனோடெராவை சந்தித்து பேசினார். அப்போது வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதன்பின்னர் அமெரிக்க ராணுவ செயலாளர் சக் ஹெகல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். ‘‘வடகொரியாவின் அணு ஆயுத மிரட்டலை சமாளிக்க ஜப்பானுக்கு ஏவுகணைகளை தாக்கி அளிக்கக்கூடிய 2 போர்க்கப்பல்களை அமெரிக்கா வழங்க இருப்பதாக கூறினார்.
இக்கப்பல்கள் 2017–ம் ஆண்டு வழங்கப்பட உள்ளன. இக்கப்பல்களில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் கருவி உள்ளது. அது நீண்டதூரம், குறுகிய மற்றும் நடுத்தர தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை வழிமறித்து மோதி அழிக்கும் திறன் கொண்டது.
ஏற்கனவே இதுபோன்ற 5 போர்க்கப்பல்களை ஜப்பானுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு அஞ்சடிகார நாடகமே