காபூல், ஏப். 7– ஆப்கானிஸ்தானில் நேற்று முதன் முறையாக மக்களால் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் தேர்தல் நடந்தது. அதை சீர்குலைக்க தலிபான் தீவிரவாதிகள் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
தேர்தலுக்கு முன்பே தலைமை தேர்தல் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் தற்கொலை தாக்குதல்களை நடத்தினர். பொதுமக்கள் ஓட்டு போடக்கூடாது என மிரட்டல் விடுத்தனர்.
அதை மக்கள் பொருட்படுத்தவில்லை. துணிச்சலாக வந்து பெருமளவில் வாக்களித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகள் வெடி குண்டு தாக்குதல்களை நடத்தினர். அதில் 20 பேர் உயிரிழந்தனர்.
பதிலுக்கு ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. துப்பாக்கி சூடு நடத்தி தீவிரவாதிகளை வேட்டையாடியது. அதில், 89 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் நடந்த ஜனநாயக முறையிலான அதிபர் தேர்தலை அமெரிக்க அதிபர் ஒபாமா வரவேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.