ஜேர்மனியில் ஏராளமான இளைஞர்கள் குடிப்பழக்கத்தில் சிக்கியுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.
ஜேர்மனியின் அரசாங்க மருத்துவ ஆணையம் அந்நாட்டிலுள்ள குடிக்காரர்களின் எண்ணிக்கையை அறிய கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது.
இதில் கடந்த 2013ம் ஆண்டில் 26,000 இளைஞர்கள் மதுப்பழக்கதினால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் கடந்த 2012ம் ஆண்டு 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 44 சதவீத இளைஞர்கள், மற்றும் 12 முதல் 17 வயதுக்குட்பட்ட 17 சதவீத இளைஞர்கள், மாதந்தோறும் தங்களது குடிப்பழக்கத்தை அதிகரித்து வருவதாக கருத்துக்கணிப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மருந்துவ ஆணையர் மர்லீன் மோர்ட்லர் கூறுகையில், இளைஞர்கள் மத்தியில் மது அருந்தும் பழக்கம் அதிகமாக இருப்பது சுகாதாரத்தை சீரழிக்கிறது என்றும் இளைஞர்கள் சமூகத்தின் பொறுப்பு அறிந்து மது அருந்தும் பழக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
பீரின் சுவையே தனி ! உள்ளம் ஆனந்த கூத்தாடும்.
கசக்கும் கலவையைக் குடித்து விட்டு அது கொடுக்கும் மயக்கம் ஆனந்தம் என்பதா?. அது நிலையானதா? குடித்து விட்டு மூத்திரம் பெய்ந்தால் போய் விடும் இந்த ஆனந்தம். மீண்டும் இந்த ஆனந்தம் வேண்டுமானால் இன்னும் RM15.00 வெள்ளி கொடுத்துதான் பெற முடியும். அதுவும் இரண்டு மூன்று புட்டிகள் உள்ளே சென்றால்தான் காணமுடியும். என்ன இன்பமோ போங்க உங்க இன்பம். தயவு செய்து உங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்து விடாதீர்கள்.