திருமணத்தில் சிரிக்க கூடாது, சாவு வீட்டில் அழக்கூடாது: தீவிரவாதிகளின் ஆதிக்கம்

xinjiangசீனாவில் உள்ள பாகிஸ்தான் எல்லைப்பகுதியின் நகர் ஒன்றில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு பல விதிமுறைகளை அங்குள்ள திவிரவாதிகள் முன்வைத்துள்ளனர்.

சீனாவில் உள்ள பாகிஸ்தான் எல்லையின் ஸின்ஜியாங் மாகாணத்தில் உகியார் என்ற நகரம் அமைந்துள்ளது.

இங்கு உள்ள தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருவதுடன், பெரும்பாலும் அப்பகுதியில் இஸ்லாமியர்களுக்கு கடுமையான விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

உகியாரை சார்ந்த இஸ்லாமியர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க , வானொலி கேட்க, பத்திரிகைகள் படிக்க, பாட்டு பாட மற்றும் நடனமாட போன்றவற்றிற்கு தடை விதித்துள்ளனர்.

மேலும் திருமண வீட்டில் மகிழ்ச்சிகரமான தருணங்களில் ஒருவரை ஒருவர் சந்தித்து சிரித்து மகிழக்கூடாது என்றும் சாவு வீட்டில் துக்கம் தாங்காமல் அழக்கூடாது எனவும் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இவ்விடயம் குறித்து ஸின்ஜியாங் மாகாண கவர்னர் சீன அரசுக்கு கடிதம் எழுதியதுடன், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்