65 லட்சம் வாகனங்களைத் திரும்பப் பெறுகிறது டொயோட்டா

ஏற்றுமதிக்கு தயாராகவுள்ள டொயோட்டா கார்கள்

 

கார் தயாரிப்பு வரலாற்றில் இந்த அளவுக்கு ஒரு நிறுவனமும் தனது தயாரிப்புகளை திரும்பப் பெறுவது இதுவே முதல் முறை.

உலகின் மிகப்பெரும் கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா, தனது யாரிஸ், அர்பன் க்ரூய்ஸர், RAV 4 மற்றும் ஹைலுக்ஸ் ரக வாகனங்களையே இப்போது திரும்பப் பெறுகிறது.

இவற்றில் முப்பது லட்சம் வாகனங்களில், விபத்துக்கள் ஏற்படும்போது பாதுகாப்புக்காக வைக்கப்பட்டு காற்றுப் பைகளில் பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டது. விபத்து ஏற்படும்போது அவற்றில் காற்று நிரம்புவதில் பிரச்சினைகள் இருந்தன.

டொயோட்டோ கார் தொழிற்சாலை ஒன்று

 

மேலும் இருக்கைகள், ஸ்டியரிங் மற்றும் வாகனத்தை துவக்கவெனவுள்ள மோட்டர்கள் ஆகியவற்றிலும் பிரச்சினைகள் இருந்தன.

எனினும் இந்தப் பிரச்சினைகள் காரணமாக விபத்துக்களோ, காயமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக தாங்கள் அறியவில்லை என டொயோட்டா கூறியுள்ளது.

கடந்த சில மாதங்களில் ஐந்தாவது முறையாக இவ்வாறு குறைபாடுகள் காரணமாக டொயோட்டா தமது வாகனங்களை திரும்பப் பெறுகிறது. -BBC