பாகிஸ்தானிய தலைநகர் இஸ்லாமாபாத்தின் புறநகர்ப் பகுதியில் இருக்கும் ஒரு பழ மற்றும் காய்கறிச் சந்தையில் இடபெற்ற ஒரு வெடிப்பில் குறைந்தபட்சம் 20 பேராவது கொல்லப்பட்டனர்.
மேலும் 100 பேர் அதில் காயமடைந்தனர்.
குண்டு ஒரு பழக் கூடையில் மறைத்து வைக்கப்படிருந்திருக்கிறது.
கடந்த 6 வருடங்களில் இஸ்லாமாபாத்தில் நடந்த மிகவும் கோரமான தாக்குதல் இதுவாகும்.
அரசாங்கத்துடன் தற்போது மோதல் நிறுத்தத்தில் இருக்கும் பாகிஸ்தானிய தலிபான்கள், தமக்கும் இந்தத் தாக்குதலுக்கும் தொடர்பு கிடையாது என்றும், பொதுமக்களை இலக்கு வைத்துத் தாக்குவது இஸ்லாமிய சட்டங்களுக்கு முரணானவை என்றும் கூறியுள்ளனர்.
நாட்டை ஸ்திரமிழக்கச் செய்வதற்கான பாகிஸ்தானின் எதிரிகளின் நடவடிக்கை இது என்று அந்த நாட்டின் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.