உக்ரைனில் ரஷ்யா ஆதிக்கம்: அமெரிக்கா கண்டனம்

john_kerry_usஉக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து அச்சுறத்தல் நடத்தி வருவதாக அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் மாகாணத்தில் கடந்த 8ம் திகதி, வெளிநாட்டு தொடர்புகளுக்கான நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறுகையில், உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்ய ஆதரவாளர்களின் செயல் அளவிற்கு மீறி போய்க்கொண்டிருக்கிறது.

அப்பகுதியில் ரஷ்யா சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதுடன், பிரிவினைவாதிகளையும் ஊக்குவித்து வருகிறது.

மேலும் ரஷ்யாவின் ஆதிக்கம் அதிகளவில் உக்ரைனில் இருப்பதால், இதற்கு எதிராக கடும் நடவடிக்கையை சர்வதேச நாடுகள் எடுக்க வேண்டும் என்றும் சர்வதேச சட்ட விதிகளை மீறி விரும்பத்தகாத செயல்களில் ரஷ்யா ஈடுபடுவதை தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம் எனவும் கூறியுள்ளார்.