குலா: இந்திய சமூக பிரச்சனைகளைக் கையாள்வதற்கு நாடாளுமன்ற சிறப்புக் குழு வேண்டும்

kula1-710712-மு. குலசேகரன், ஏப்ரல் 11, 2014.

நேற்றைய  தமிழ் நாளிதழ் செய்தியில் ம.இ.கா தலைவர்களின் இந்திய சமூக சேவைகளைப் பற்றி பிரதமர் கேள்வி எழுப்பியிருந்தது ம.இ.கா தலைவர்களுக்கு  அதிர்ச்சியைக் கொடுத்திருந்தாலும், இது  எதிர்பார்த்த ஒன்றுதான் என்பதை அவர்கள்  இப்பொழுது உணர்ந்திருப்பார்கள்.

 

பிரதமர்  சுட்டிக்காட்டிய 20 தீர்க்கப்படாத  பிரச்சனைகளை  அவர் வாயாலேயே  கேட்ட போது வருவது      அதிர்ச்சியாகத்தான் இருக்கும். பிரதமருக்கு தெரிந்த அளவிற்குக்கூட  ம.இ.காவினற்கு  இந்தியப் பிரச்சனைகள் தெரியவில்லை என்பததைத்தான் இது உணர்த்துகின்றது.

 

கடந்த 17 வருடங்களாக நான் எத்தனையோ முறை இந்தியர் பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிவிட்டேன். ஓர் இந்தியன் என்ற அடிப்படையில் நான் இந்தியர் பிரச்சனைகளைத் தொட்டு அடிக்கடி பேசியதால் எனக்கு இனவாதி என்று நாடாளுமன்றத்தில் அம்னோவால்  பட்டப்பெயர்  வழங்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டேன். இது ம.இ.காவினற்கும்  தெரியும்.palani_mic

 

தமிழ்ப்பள்ளிகளின் நிலைமை,  ஆலயங்கள், சுடுகாடு, மதமாற்றம், பொருளாதாரத் துறையில்  இந்தியர்களின் பங்கு, மெட்ரிக்குலேசன் இட ஒதுக்கீடு என எல்லா இந்தியர் தொடர்பான பிரச்சனைகளை எல்லாம் என்னால் அவ்வப்போது நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டன. ஆனாலும், அதற்கான விடைதான் ஆளும் கட்சியில் உள்ள ம.இ.காவால் உள்வாங்கி அவற்றை தீர்க்க திராணியில்லை. இதே பிரச்சனைகளை பிரதமர் பட்டியலிட்டுக் கூறும் பொழுது ம.இ.கா தலைவர்களுக்கு ஈயத்தைக் காய்ச்சி காதில் உற்றுவது போல் இருக்கிறது. எப்பொழுதோ கட்டம் கட்டமாக தீர்க்கப்பட்டிருக்கின்ற வேண்டிய பிரச்சனைகளை அப்படியே கிடப்பில் போட்டததால்தானே அது இன்று பூதாகரமாக வெடித்து  பிரதமரே நொந்து கொள்ளும் அளவிற்கு  விஸ்வரூபமெடுத்திருக்கிறது!

 

நாடளுமன்றத்திற்கு  ம.இ.கா பிரதிநிதிகள் சரியாக வருவதேயில்லை. அப்படி இருக்கும் பொழுது  என்ன   என்ன பிரச்சனைகள் mic_openhouse நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுகின்றன என்பது எப்படி ம.இ.காவினற்கு தெரிய வரும்? வெறும் எஸ் எம் .எஸ் மூலமாக  பிரச்சனைகளைக் களைய  முடியாது. தொலைபேசியில் தொடர்பு கொண்டாலோ, அவர்களின் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டாலோ ம.இ.கா தேசிய தலைவர் கண்டு கொள்வதே இல்லை. வெறும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் எல்லாம் நடந்துவிடும் என்று எண்ணிக் கொண்டிருகிறார். தொலைபேசி அழைப்பிற்கு  மதிப்பளிக்கும் ஒரே இந்திய அரசியல்வாதி   முன்னாள் ம.இ.கா தலைவர் ச. சாமிவேலு மட்டுமே என்றால் அது மிகையாகது. சாமானிய மக்கள்கூட எப்பொழுது தொலைபேசி வழி அழைத்தாலும் நிச்சயமாக அவரிடமிருந்து பதில் வரும்.

 

இப்பொழுதுள்ள ம.இ.கா தலைவர்கள்  சம்பந்தன் காலத்திலுள்ளவர்கள் போலல்லாமல், எப்படிஅரசாங்கத்திடமிருந்து சலுகைகளைப் பெறாலாம் என்ற நோக்கிலேயே செயல் படுகின்றார்கள்.  சமுதாயப் பிரச்சனைகளை வாயளவில் சொல்லி விட்டு சொந்த இலாபத்திற்காக அரசாங்கக் குத்தகைகளைப் பெறுவதிலும் மானியங்கள்  கேட்பதிலும் தங்கள் நேரங்களை அதிகமாகச் செலவிடுகிறார்கள். நான் ஏன் இதைச் சொல்கின்றேன் என்றால், சமுதாய  நலன் கருதி சம்பந்தன் அன்று வாங்கிய தோட்டங்கள் இன்று கோடிக்கணக்கான வெள்ளி பெறுமான உள்ள சமுதாயச் சொத்தாய் இருக்கின்றன. அதே சமயம் சாமிவேலுவால் தொடங்கப்பட்ட  மைக்கா ஹோல்டிங்ஸ்சின் நிலைமை அதற்கு  தலைகீழாக இருக்கிறது. ஏன் நம்மிடம்  சம்பந்தன் போன்ற ஆட்கள் இக்காலக்கட்டத்தில் யாருமே இல்லையா? அப்படியில்லை! இதற்கெல்லாம் சமூகத் தலைவர்களின்  சமுதாய ஒழுக்கமின்மையே முக்கியகாரணமென்று கூறலாம். அன்று சாமானிய மக்களை  பிரதிநிதித்து  ஆரம்பிக்கப்பட்ட ம.இ.கா எனும் கட்சி இன்று பணக்காரர்களுக்கும் மேல் மட்ட இந்தியர்களுக்குமட்டுமே எனமாறிவிட்டது. அது சாமானிய இந்தியனை விட்டு வெகு தூரம் போய் விட்டது!

 

ஒரு குறிப்பிட்ட தொகையினை இந்திய சமூக அமைப்புக்களிடம் கொடுத்தாலே பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு விடலாம் என்ற எண்ணத்திலேயே  இவ்வளவு நாள் ம.இ.கா செயல் பட்டு வந்திருக்கின்றது. எப்படி பணம் கையாளப்படுகிறது; என்ன திட்டங்களுக்காக அவை கொடுக்கப்பட்டுள்ளன; அவை எப்படி நிர்வகிக்கப்படுகிறது;  செயலாக்கத்திற்கு பின்பு உள்ள கணக்காய்வு போன்றவை ம.இ.காவின் அறிவுப் பெட்டகத்தில் இல்லை.

 

இதற்கெல்லாம் என்ன தீர்வு ?

 

நான் முன்பு கூறியிருந்தது போல இந்தியர்களின் பிரச்சனைகளைக் களைவதற்கு நாடாளுமன்ற சிறப்புக் குழு ஒன்று நிறுவப்பட வேண்டும். ம.இ.காவின் தலைவர்  உட்பட  மற்ற ம.இ.காவை பிரதிநிதிக்கும் அமைச்சர்கள் அனைவரும் அவர்கள் பொறுப்பேற்றிருக்கும் திட்டங்கள் குறித்து இந்த சிறப்புக் குழுவிடம் விளக்கம் அளிக்க வேண்டும். இந்தச் சிறப்புக் குழு இந்தியர்கள

TAGS: