கர்பால் ஈமச்சடங்கு: காணப்படாத போலீசார் குறித்து விசாரணை

karpal - post mortemநேற்று நடைபெற்ற கர்பால் ஈமச்சடங்கு ஊர்வலத்தில் கூட்டத்தினரைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரு சில போலீசாரே இருந்தனர். பினாங்கு முதலைமைச்சர் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்தார். “நடைபெற்ற பொது ஈமச்சடங்கின் போது காணப்பட்ட குறைபாடுகளுக்காக மக்கள் மன்னிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். “தேவான் ஸ்ரீ பினாங்கிற்கு வெளியில் கூட விருக்கும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கானDAP-Guan Eng நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஒப்புக்கொண்டவாறு போலீசார் வரவில்லை”, என்று லிம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார். “திட்டமிட்டிருந்தவாறு போலீசார் வராதற்கான காரணங்களை நிர்ணயிப்பதற்காக அரசாங்கம் ஒரு விசாரணையை நடத்துவதோடு மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய பலவீனங்களைக் கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்”, என்றாரவர். ஈமச்சடங்கில் கலந்துகொண்டதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள 25,000 மக்களுக்கு லிம் நன்றி தெரிவித்தார். “இவ்வளவு பெரிய கூட்டம் கூடும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. நாட்டின் பல இடங்களிலிருந்து கர்பாலுக்கு இறுதி மரியாதை செலுத்த வந்திருந்தவர்களுக்கு அச்சந்தர்ப்பம் கிடைக்காமல் போய் விட்டதற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்”, என்று அவர் மேலும் கூறினார்.

TAGS: