சிரியாவில் ஜனாதிபதி தேர்தல்

syria_president_election_001சிரியாவில் விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கண்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள சிரியா நாட்டில் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சி நடக்கிறது.

இவரது ஆட்சிக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய போராட்டம் இன்னும் முடியாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அப்பாவி மக்களையும், போராட்டக்காரர்களையும் சிரியா அரசு கொன்று குவித்து வருகிறது.

அமெரிக்கா வற்புறுத்தியும், ஜனாதிபதி ஆசாத் பதவி விலகாததால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் போராட்டக்காரர்களுக்கு ஆயுத உதவி அளித்து வருகின்றன.

இதற்கிடையே ரசாயன ஆயுதம் பயன்படுத்தியதாக சிரியா அரசு மீது கடந்த ஆண்டு புகார் எழுந்ததால், அந்நாட்டின் மீது நேட்டோ எனப்படும், அமெரிக்க ஆதரவு நாடுகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டன.

ஆனால் ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் தலையிட்டு ரசாயன ஆயுதங்களை அழிக்க உடன்பாட்டை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் வருகிற ஜூன் மாதம் 3ம் திகதி சிரியாவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்றும், இதற்கான வேட்பு மனு தாக்கல் இம்மாதம் 22 முதல் துவங்குவதாகவும், சிரியா பார்லிமென்ட் சபாநாயகர் முகமது லகாம் அறிவித்துள்ளார்.